இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நேற்யை போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், போட்டியை பார்க்க வந்த நடிகை ஊர்வசி ரவ்தெலா பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் அதிபர் அருள் சரணவன் நாயகனாக நடித்த தி லெஜண்ட் படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனவர் ஊர்வசி ரவ்தெலா. பாலிவுட் நடிகையான இவரும் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டும் காதலிப்பதாக தகவல்கள் பரவியது.
ஆனால் சமீபத்தில் இவர்கள் இருவரும் ட்விட்டரில் மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பண்டை ஊர்வசி தம்பி என்றது, அவரை பண்ட் தங்கச்சி என்று கூறியது பரபரப்பின் உச்சமாக இருந்தது. மேலும் தனக்கு கிரிக்கெட் போட்டியே பிடிக்காது என்றும், சச்சின் மற்றும் விராட் ரொம்ப பிடிக்கும் என்று வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு ஊர்வசி பதில் அளித்திருந்தார்.
இதனிடையே நேற்று நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்க்க ஊர்வசி ரவ்தெலா ஸ்டேடியத்திற்கு சென்றுள்ளார். இவரை பார்த்த ரசிகர்கள் பண்டுடன் இணைந்து மீம்ஸ் பதிவிட தொடங்கிவிட்டனர். இதில் ஸ்டேடியத்தில் ஊர்வசியை பார்த்த ரிஷப் பண்ட் ப்ரபோஸ் செய்வது போல் வெளியிட்டிருந்தனர்.
மேலும் பிரதமர் மோடியின் விமான பயணத்தை குறிப்பிட்டு ஊர்வசியும் பண்டும் போட்டி முடியும்வரை ஒருவரை ஒருவர் பார்க்காமல் இப்படித்தான் இருந்தார்கள் என்று பதிவிட்டுள்ளனர்.
ஒரு வாலிபர் செல்போனுடன் விழும் வீடியோவை வைத்து ஊர்வசி ரவ்தெலாவை போட்டோ எடுக்க இந்த கேமராமேன் பட்ட பாடு இருக்கே என்று கூறியுள்ளனர்
மேலும் பல மீம்ஸ்கள் இணையத்தில் வட்டமிட்டு வரும் நிலையில், இதை பார்த்த ரசிகர்கள் சிலர் ஊர்வசி வந்த நேரம் பார்த்து பண்டுக்கு களமிறங்க வாய்ப்பு கொடுக்காம விட்டீங்களே ரோகித் என்று கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“