Advertisment

இந்தியன் 2 ரிவ்யூ மீம்ஸ்: இப்படி பண்ணீட்டீங்களே சங்கர் சார்: கலாய்த்து தள்ளும் நெட்டீசங்கள்

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள இந்தியன் 2 திரைப்படம் உலகெங்கிலும் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில் படத்தை விமர்சிக்கும் வகையில் மீம்ஸ் வெளியாகி உள்ளது.

author-image
Vasuki Jayasree
புதுப்பிக்கப்பட்டது
New Update
saea

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள இந்தியன் 2 திரைப்படம் உலகெங்கிலும் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில் படத்தை விமர்சிக்கும் வகையில் மீம்ஸ் வெளியாகி உள்ளது. 

பொதுவாக சங்கர் படத்தின் மீது எப்போதும்  அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அவரின் அந்த பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி எந்திரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அவரது சில படங்கள் ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறது. இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. 

Advertisment



எதிர்பார்த்த அளவிற்கு எந்த விஷயங்களும் படத்தில் இல்லை என்றும் படத்தில் உயிரோட்டம் இல்லை என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியன் 2 படத்தை விமர்சித்து மீம்ஸ் வெளியாகி உள்ளது. 

கமல்ஹாசன் படத்தின் புரோமோஷன்போது எனக்கு இந்தியன் 2-வை விட இந்தியன் 3 தான் பிடிக்கும் என்று கூறியது இப்போது தான் புரிகிறது என்றும் தெரிவித்துள்ளனர். படத்தில் எந்த விதமான ஸ்வாரஸ்யமும் இல்லை என்றும் இயக்குநர் சங்கர் எங்களை ஏமாற்றிவிட்டார் என்றும் சிலர் மீம்ஸ் வெளியிட்டு உள்ளனர். 



நடிகர் சித்தார்த்தின் நடிப்பு எரிச்சலை வரவழைப்பதாக சிலர் தெரிவித்துள்ளனர். படத்தை எந்தவிதத்திலும் தங்களோடு தொடர்புபடுத்த முடியவில்லை என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் படத்தின் காட்சிகள் தரமாக இருந்தாலும், புதுவிதமாக படத்தில் ஒன்றுமில்லை என்றும் விமர்சித்துள்ளனர். 



 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment