/tamil-ie/media/media_files/uploads/2017/07/ashwin-m2.jpg)
News Today Live Updates
மெர்சல் படத்தின் முதல்நாள் ஆரவாரத்துக்காக ஆவலுடன் காத்திருப்பதாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ட்வீட் போட்டிருக்கிறார்.
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, சமந்தா நடிக்கும் திரைப்படம் மெர்சல். நித்யா மேனன், காஜல் அகர்வால், சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, உள்ளிட்ட பலர் நடிப்பில் ரீலிசாக காத்திருக்கும் இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம், அக்டோபர் 18-ம் தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், மெர்சல் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ட்வீட் போட்டுள்ளார். அதில், 'மெர்சல்' எனும் திருவிழாவிற்கு காரசாரமான தொடக்கமாக டீசர் அமைந்துள்ளது. மெர்சல் பட முதல்நாள் ரிலீஸுன் ஆரவாரத்திற்காக ஆவலுடன் காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 5-ம் தேதி இந்த ட்வீட்டை அஸ்வின பதிவிட்டுள்ளார்.
Mersal teaser seems to be a spicy starter for what could be a festival of a movie. Can't wait to see the opening day fever amongst the fans.
— Ashwin Ravichandran (@ashwinravi99) 5 October 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.