அஜித் குமார் நடிப்பில் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் துணிவு.
அஜித் குமார் நடிப்பில் பொங்கலுக்கு முன்னதாக வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படம் துணிவு. இந்தப் படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். படத்தில் மஞ்சு வாரியரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டுவருகிறது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு படத்தின் இயக்குனர் ஹெச். வினோத் அளித்த பேட்டி ஒன்றில் ருசிகரமான தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.
Advertisment
மஞ்சு வாரியர்
படத்தில் மஞ்சு வாரியருக்கு போர்ட் ஓட்டுவதுபோல் சீன் ஒன்று உள்ளது. இந்த சீனில் துணிவுடன் நடித்துள்ளார் மஞ்சு வாரியர். ஆனால் அவருக்கு போர்ட் ஓட்ட தெரியாதாம். இந்தத் தகவலை இயக்குனர் வெளிப்படுத்த சிரித்துக் கொண்டே ஒப்புக்கொண்ட மஞ்சுவாரியம் தாம் போர்ட்-ஐ, ஸ்கூட்டி போல் ஓட்டியதாகவும், அஜித் உற்சாகப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அஜித் குமாரை பற்றி யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் உள்ளது. அவர் சிறந்த கணக்காளர். வருமான வரி தாக்கல், உதவி, சேமிப்பு, குடும்பம் என தனது சம்பளத்தை பிரித்துக் கொள்வார். முடிந்தால் நீங்களும் அதைப் பின்பற்றுங்கள் எனக் கூறினார் என்றார். மேலும், ஷூட்டிங் ஸ்பார்ட்டில் தனக்கு ஒரு ரெசிபியை அஜித் குமார் செய்து கொடுத்தார். இப்போது நினைத்தாலும் நாவில் எஞ்சில் ஊறுகிறது” என்றார் இயக்குனர் ஹெச். வினோத்.
Advertisment
Advertisements
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/