எப்போதும் அரசியலில் இருக்கிறேன் : கமல்ஹாசன் பரபர

வில்லனா நடிக்கனும்னா அதுக்கு தகுந்த மாதிரி கொஞ்சம் டிஃபரன்ட்டா சில எமோஷனோட நடிக்கனும்

தமிழ் திரையுலகின் அடுத்த எதிர்பார்ப்பு கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2. கமலின் திரைப்படங்கள் சர்ச்சைக்குள்ளாவதும், வெளிவர தடைகள் வருவதும்ட புதிதல்ல. 62 வயதான கமல்ஹாசன் சவால்களை சந்திப்பதில் இன்றும் வலிமையானவராகவே திகழ்கிறார்.

விஜய் டிவி-யின் மூலமாக பிக் பாஸ் நிகழ்ச்சி விரைவில் தமிழுக்கு வருகிறது. அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வரவுள்ள கமல்ஹாசன், சின்னத்திரையில் முதல் முறையாக காலடி எடுத்துவைக்கிறார். இதற்காக சென்னை திருவேற்காட்டில் உள்ள ஸ்ரீ கோகுலம் ஸ்டுடியோவில் போட்டோ ஷுட் நடந்துள்ளது.

பிக் பாஸ்-தமிழ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு என்ன காரணம்?

என்னுடைய தனித்தன்மையை ஒரு நிகழ்சி மூலமா வெளிப்படுத்த நினைச்சேன். இந்த நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்டுள்ள வரைமுறைக்குள்ளாக, அதை வெளிப்படுத்த முடியும் என நான் நம்புறேன்.

கேமராக்கு முன்னால நடிப்பதில் கமல்ஹாசனுக்கு நிறைய அனுபவம் இருக்கும். ஆனா இது மாதிரி ஷோ-வுல வருவது உங்களை பொருத்தவரை எப்படி?

நிகழ்ச்சிக்கு தொகுப்பாளர் என்பது புதிய அனுபவமாக தான் இருக்கும் என்பது சரிதான். என்னிடம் வந்து வில்லன் ரோலில் நடிக்க வேண்டும் என கூறினால் ஏற்படும் வித்தியாசம் இருக்குதே, அது போல தான் இந்த விஷயமும். என்னைப் பொருத்தவரையில், இது எனக்கு தரப்பட்டுள்ள கதாப்பாத்திரமா தான் கருதுறேன். வில்லனா நடிக்கனும்னா அதுக்கு தகுந்த மாதிரி கொஞ்சம் டிஃபரன்ட்டா சில எமோஷனோட நடிக்கனும். அது மாதிரி இந்த நிகழ்ச்சில தொகுப்பாளராக வருவது, கொஞ்சம் டிஃபரன்ட்டா இருந்தாலும், எல்லாம் ஒரே விஷயம் தான்.

முதல்முறையாக விளம்பரத்தில் நடித்தது முதல், ட்விட்டரில் கணக்கு தொடங்கி ரொம்ப ஆக்டிவ்வா இருக்குறது. இப்போ டிவி ஷோ-க்கு வந்துருக்கீங்க. அது பற்றி?

என்னைய நானே அப்டேட் பண்ணிக்கிறது என்பது எனக்கு பிடிக்கும். அது மூலமா மட்டும் தான் வாழ்க்கைய சுவாரஸ்யமாக அமைக்க முடியும்னு நினைக்குறேன். அதோடு மட்டுமல்லாமல் நான் ஒரு நடிகன் என்பதால், செய்வதை திருப்தியாக செய்ய வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.

விஸ்வரூபம் 2 போஸ்டர் மூலமா ஏதாவது சொல்ல வர்ரீங்களா?

என்னோட எல்லா படங்களிலும் ஒரு ஸ்டேட்மென்ட் இருக்கும், குறிப்பா அந்த படத்துக்கு நானே எழுதியிருந்தா அந்த ஸ்டேட்மெட்ட பாக்க முடியும். என்னோட சில படங்களில் பொழுதுபோக்கை மையமாக வைத்து உருவாக்குன படங்கள் மூலமா எனக்கு வருமானம் கிடைச்சது, அதோடு அந்த படம் தொடர்பாக எந்த புகாரும் வரல. நான் எழுதி நடிச்ச படங்களான மகாநதி, அன்பே சிவம், ஹே ராம் மற்றும் விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களில் ஒரு பாய்ண்ட் ஆப் வீயூ இருக்கும். அதெல்லாம் நினைத்து பார்த்தா நான் அரசியலில் நுழைந்து கொண்டிருக்கிறேனா என்ற எண்ணம் தோன்றும். ஆனா, அதுக்கு அப்புறமா நான் எப்போதுமே அரசியல்ல தான் இருக்கேன்னு நானே உறுதிபடுத்திப்பேன்.

உங்களுடைய கடினமான காலகட்டங்களின் போது எது மாதிரி உங்களுக்கு நீங்களே அட்வைஸ் பண்ணிகிட்டீங்க?

எக்கிட்ட நனே எதுவும் சொல்ல மாட்டேன். ஆனா, மற்றவங்க என்னிடம் வந்து ஏதாவது சொல்லும் போது, அந்த கருத்தை அவங்களுடைய பாய்ன்ட் ஆப் வியூல இருந்து பார்த்து புரிஞ்சிப்பேன். உங்களுடைய தவறுகளை நீங்க புரிஞ்சிக்கனும்னா, அதை அனுபவித்து பார்தால் தான் தெரியும். உதாரணத்துக்கு, சமீபத்தில் கூட நான் வீட்டுல இருக்கும் போது கீழ விழுந்தேன். இதுக்கு நாம யாரையும் குற்றம் சொல்ல முடியாது. ரொம்ப சீரியஸான மனநிலைக்கு போகாம, வாழ்கைய சீரியசா எடுத்து வாழனும் அவ்வளவு தான்.

இந்திய திரைப்பட வரலாற்றிலேயே முதல்முறையாக பாகுபலி ரூ.1000 கோடி வசூலில் சாதனை படைச்சிருக்கு. அது பற்றி?

பாகுபலி படத்துல திரைப்பட குழு நல்ல கடின முயற்சி எடுத்துருக்காங்க. அதுக்கு அவங்களுக்கு வசூல் ரீதியான சாதனை கிடைச்சிருக்குது. ஆனா, ஹாலிவுட் திரைப்படத்தை மிஞ்சியது அப்படின்னு சொன்னா, நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏன்னா, இதெல்லாம் கம்யூட்டர் கிராபிக்ஸ்ல பண்ணது என்று கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close