Advertisment

ரஜினி இமிடேஷன், ஈழத்தமிழர் அரசியல், ஜகமே தந்திரத்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள்...

Jagame Thandhiram: நடிகர் தனுஷின் ஜெகமே தந்திரம் படத்தை பார்த்த ரசிகர்கள் டிவிட்டர், ஃபேஸ்புக்கில் படம் குறித்து விமர்சித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
jagame thanthiram

தற்போது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் ஃபேவரைட் டயலாக் ஆகியுள்ளது "துரோகம் நம் இனத்தின் சாபம்". எல்லாம் நம்ம தனுஷின் ஜெகமே தந்திரம் ஃஎபக்ட்தான். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நேற்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜெகமே தந்திரம் வெளியானது. மொத்தம் 17 மொழிகளில் 190 நாடுகளில் இந்த படம் வெளியாகியுள்ளது. படம் பார்த்துவிட்டு சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பதிவிடும் கருத்துக்கள் தான் கவனம் பெற்றுள்ளது.

Advertisment

டிவிட்டர்/ஓலக்கநாயகன் கமலகாரசர்: தலைவரை சினிமால பார்த்து பார்த்து ரசிக்கிற நமக்கே அவரோட பாதிப்பு இருக்கும் போது, தலைவர் கூடவே இருக்குற தனுஷுக்கு தலைவர் பாதிப்பு இல்லாமலா இருக்கும்.. தனுஷின் ஒவ்வொரு அசைவும் தலைவர் போலவே இருக்கு.. நல்லா தான் இருக்கு..

டிவிட்டர்/ஐஷூ: ஆனா சில வார்த்தைகள்ல director ku குரூரம் நிறைஞ்சிருக்குனு சொல்லலாம். அதேபோல நிறைய இடங்கள்ல பேட்ட ரஜினி சாயல்ல தனுஷ் நடிச்சிருக்காப்ல .#JagameThandhiram One time paakalam Avlothaan

டிவிட்டர்/மல்லிகா நல்லுசாமி: இந்தப்படத்தில் தனுஷ் அப்படியே ரஜினி ஸ்டைல ஃபாலோ செஞ்சிருக்கார்..

டிவிட்டர்/லேடி : ஜகமே தந்திரம்: பேட்டை படத்தின் பிளாஷ்பேக்கில் வரும் ரஜினியை அப்படியே சுருளி ஆக மாற்றி, அதே, கிடாய் மீசை, உடல்மொழி, பேச்சு, பாவனை என ரஜினி கொஞ்ச நேரம் அதில் செய்ததை இதில் தனுஷ் முழுவதுமாகச் செய்கிறார். மிகச் சிறந்த நடிகனை துவம்சம் பண்ணிட்டாங்கப்பா! #JagameThandhira

டிவிட்டர்/லாவண்யா: அசுரன், கர்ணன் படங்களை பார்த்த பிறகு #ஜகமேதந்திரம் மிக சாதாரண படமாக தோன்றுகிறது. தனுஷ் ரசிகர்கள் ரசிக்க நிறைய இருக்கிறது படத்தில், பொதுவான ரசிகர்களுக்கு சிக்கன் பிரியாணிக்கு பதிலாக வெஜ் பிரியாணி கொடுத்த உணர்வு தான். வெஜ் பிரியாணியும் சுவை தான்.

டிவிட்டர்/ ராயல் என்ஃபீல்டு புத்தா: இலங்கை அகதிகள் கதையா? அதையும் தெளிவா சொல்லல, கேங் ஸ்டார் படமா? அதுலையும் நிறையா லாஜிக் ஓட்டை, தமிழ் போலீஸ்தான் கொலை பண்ற இடத்துக்கு வரமாட்டாங்கன்னா லண்டன் போலீஸ்கூட எங்கேயும் வரல? + தனுஷோட அசால்ட்டான நடிப்பு, இசை, செம்ம தரமான ஒளிப்பதிவு. படம் போரடிக்கல

டிவிட்டர்/ அன்பெழில்: தமிழ்நாட்டுல தமிழன் அல்லாதவனுக்கு வேலை கொடுக்கக் கூடாது. ஆனா வெளிநாட்டுக்குப் போய் தமிழன் சம்பாத்திக்கணும், அவங்க எங்க நாடு எங்க மக்களுக்குன்னு சொல்லக் கூடாது! ஒவ்வொரு பிரேமிலும் தனுஷ். Over exposure. ஹீரோயிசத்துக்கும் ஓர் அளவு இருக்கு.

டிவிட்டர்/ மனோ: படத்தில் 100 குறைகள் இருந்தாலும், பாராட்ட 1000 நல்லது இருக்கு. 190 நாடுகளில், 17 மொழிகளில் ஈழ மக்களின் வாழ்க்கையை பேசவச்சுட்டிங்க @karthiksubbaraj Folded hands Handshake நம்ம ஊர் மனநிலையையும் சாணில முக்கி அடிச்சுட்டிங்க Clapping hands sign வசனங்களின் FireOK hand உண்மை Fireகோடி நன்றிகள்

டிவிட்டர்/ கார்த்தி: மூவி மிகவும் அருமை …இலங்கையில் நடந்த துயரத்தை காமிக்கும்பொழுது தன்னையும் அறியாமல் கண்களில் தண்ணீர் குளம் …உண்மை உலக அரசியலை எடுத்துக்கூறும் வசனங்கள் …அகதிகளுடன் பேசி விளையாடி வீட்டுக்குசென்று விருந்தோம்பி அனுபவம் இருப்பதால் மனம் ஏனோ மிகவும் கனக்கிறது

பேஸ்புக்/ வருண்: சில பேருக்கு படம் புடிக்கலாம்…புடிக்காம போகலாம்…என்ன பொறுத்தவரை படம் நல்லா தான் இருந்தது…Apart from trolls, negative reviews இந்த படத்த சுப்பாராஜ் என்னோட Dream flim னு சொல்லுவாரு…ஆமா… இது அவரோட Dream flim தான்… அவர follow பண்றவங்களுக்கு தெரியும்… அவர் "ஈழப்போர்" இந்த பிரச்சனை பத்தி பேசாத படமே இல்ல…Infact short flim ல இருந்தே இந்த பிரச்சனை பத்தி பேசிக்கிட்டு தான் இருக்காரு… #காட்சிப்பிழை னு ஒரு shot flim. 5 நிமிஷத்துல ஈழத்துல வாழுற மக்களோட மனநிலைய அழுத்தமா சொல்லி இருப்பாரு…(YT ல இருக்கு முடிஞ்சா பாருங்க…)

அந்த 5 நிமிசத்தொட update version தான் இந்த "ஜகமே தந்திரம்" 😍படத்தோட நிறைய shoots வெறியா இருந்தது cinematography shreyaas krishna தரம் ✨SaNa வோட BGM வேர லெவல் 💥💙

ஃபேஸ்புக்/செந்தில்குமார் : தமிழ்ராக்கர்ஸ்ல டவுன்லோடு பன்னி எண்ணூறு எம்ப்பி வீனாகிருச்சேன்னு நமக்கே இவ்ளோ கான்டாகுதுன்னா நெட்பிலிக்ஸ்ல காசு கட்டி படம் பாத்தவங்கல்லாம் உசுரோட இருப்பாங்கங்குற.

ஃபேஸ்புக்/ பாலமுருகன் ரகோத்தமன்: தயாரிப்பாளர் கெட்டிக்காரர். படத்தை நெட்பிலிக்சுக்கு விற்று கரையேறிவிட்டார். அதில் படம் பார்த்தவர்கள்???? காதில் பூ சுற்றலாம். அது படம் எடுப்பவர்கள் அனைவருமே செய்வது. இந்த படத்தில் பூ கடையே, இல்லை பூ சந்தையையே வைக்கிறார்கள். தமிழ்நாட்டில் தான் போலிஸ் இருக்க மாட்டாங்க. லண்டனிலுமா???

தயாரிப்பாளர்க்கு பணப்பிரச்சனையோ! லண்டனில் ஒரு தெரு, இரண்டு தாதாக்கள் வீடு, கதாநாயகன் வீடு. இதிலேயே படத்தை முடிச்சிட்டாங்க. கர்ணணில் அருவாள் எடுத்தவர், இதில் துப்பாக்கி எடுத்து எல்லோரையும் ஒரு வழி செய்கிறார் தணுஷ். படம் பார்க்கும் நம்மையும் சுட்டுவிடுவார் போல் இருக்கிறது.முடியலைடா சாமி! நன்றாக வைத்து செய்துட்டாங்க!

ஃபேஸ்புக்/ சபஸ்ரீநிவாஸ் இளங்கோவன்: தமிழ் சினிமா இயக்குனர்களிடம் இருந்து காப்பாற்றப்பட வேண்டிய இரண்டு முக்கியமான விஷயங்கள் விவசாயம், இலங்கை தழிழர்..எப்பா டேய்…. ஜகமே தந்திரம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dhanush Jagame Thanthiram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment