வரலாற்றில் மிகப் பெரிய ஆளுமைகள், பிம்பங்களைப் பற்றி அவர்கள் காலத்திலும் அவர்களுக்குப் பிறகும் சில உண்மைக் கதைகளும், மிகைப்படுத்தப்பட்ட உண்மைக் கதைகளும், கட்டுக் கதைகளும் உருவாகி பரவி வந்துள்ளது. அந்த வகையில், தமிழக அரசியல் தலைவர்களைப் பற்றியும் நிறைய கதைகள் உலவத்தான் செய்கின்றன.
சமூக ஊடகங்களின் காலத்தில், இத்தகைய கதைகள் பெரிய அளவி பரப்பப்படுகின்றன. அப்படி ஜெயலலிதாவை பற்றி உலாவும் கதைகளைப் பற்றி இதயக்கனி டிவி யூடியூப் சேனலில் பேசிய மூத்த பத்திரிகையாளர் இதயக்கனி விஜயன், எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய பரிசை திருப்பி அனுப்பியது பற்றிய நிகழ்வை கூறியுள்ளார்.
இதயக்கனி விஜயன் யூடியூபில் பேசிய வீடியோவில் கூறியிருப்பதாவது: ஜெயலலிதாவுக்கு கெட்டப்பெயர் உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக எதிர்க்கட்சிகளால் சில கட்டுக்கதைகள் உருவாக்கப்பட்டது. சில கட்டுக்கதைகள் கருணாநிதியும், முரசொலி அவர்கள் சார்ந்த பத்திரிகைகள் ஜெயலலிதாவைப் பற்றி எழுதுவார்கள். ஜெயலலிதா ஷோபன் பாபுவைப் பற்றி குமுதம் பேட்டியில் கூறியிருக்கிறார்.
மேலும், அந்த வீடியோவில் பேசியுள்ள இதயக்கனி விஜயன், சசிகலா என்பவர் வந்ததால்தால் தான் ஜெயலலிதாவுக்கு கெட்டப் பெயர். ஜெயலலிதா சினிமா நடிக்கும்போது, நியாயமான சம்பளத்துக்குதான் நடிப்பார். மிகவும் எளிமையானவர். எளிமையாக ஒரு செயின் போட்டிருப்பார் அவ்வளவுதான். ஆடம்பரமான, டாம்பீகமான அணுகுமுறை ஜெயலலிதாவிடம் கிடையாது. ஜெயலலிதா வளர்ப்புமகன் சுதாகரன் விஷயத்தில் சசிகலாவால் சிக்கிக்கொண்டர். அ.தி.மு.க-வில் இதை தடுக்காதவர்கள் பெரும்பாலானவர்கள் சுயலவாதிகள்தான் என்று விஜயன் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய பரிசுப் பொருளை திருப்பி அனுப்பயது பற்றி விஜயன் கூறியிருப்பதாவது: “ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீடு கிரகப்பிரவேசம் நடந்தபோது அவர் எல்லோரையும் அழைத்தார். எம்.ஜி.ஆர் அன்றைக்கு வேறு ஏதோ வேலை காரணமாக வரவில்லை. வரமுடியாததால் பரிசுப் பொருள் கொடுத்து அனுப்பியிருக்கிறார். பரிசுப் பொருள் என்றால், செண்டிமென்ட்டாக நகைகளைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்.
ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் வராமல் நகையைக் கொடுத்து அனுப்புவதால் என்ன இருக்கிறது. அவர் வந்திருந்தார் என்றால் நான் அழைத்ததற்கு மரியாதை கொடுத்ததாக இருந்திருக்கும் என்று ஜெயலலிதா அந்த நகையை திருப்பி அனுப்பிவிட்டார். ஜெயலலிதா பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசைப்படாதவர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இதை எம்.ஜி.ஆர் நினைவில்லம் முத்து கூறினார். ஏனென்றால், அவர்தான் நகையை எடுத்துக்கொண்டு போய் கொடுக்கும்போது நகை வேண்டாம் என்று ஜெயலலிதா சொன்ன பிறகு திரும்ப எடுத்துக்கொண்டு வந்தவர் என்று விஜய் விஜயன் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"