இயக்குநர் ஏஎல் விஜய் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் வனமகன். இதில் கதாநாயகனாக ஜெயம் ரவியும், கதாநாயகியாக சாயிஷா சைகலும் நடித்துள்ளனர். வனத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் நகரப்பகுதியில் வந்து காதல் செய்யும் கதை தான் இந்த வனமகன். ஹாரிஸ் இசையமைக்கும் 50-வது திரைப்படமான ‘வனமகன்’ பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. வனமகன் திரைப்படத்தின் காட்சிகள் எதையும் தணிக்கைக்குழு கத்தரிக்காமல், யூ சான்றிதழ் வழங்கியுள்ளதாம்.
#Vanamagan certified clean ‘U’ without any cuts.. Time to celebrate.. ????????#ThinkBigStudios #DirectorVijay @actor_jayamravi @sayyeshaa pic.twitter.com/Aua2IFCoUe
— Vanamagan (@vanamaganmovie) May 9, 2017
பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞராக ஜெயம்ரவி நடித்துள்ள இத்திரைப்படம் வரும் மே 12-ம் தேதி வெளியாவதாக இருந்த நிலையில், வெளியாகும் தேதி தள்ளிப்போனது. இந்நிலையில், வரும் மே-19-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.