/tamil-ie/media/media_files/uploads/2017/12/adanga-maru.jpg)
ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்திற்கு ‘அடங்க மறு’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. ‘மிருதன்’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இவர்கள் இருவரும் இணைந்துள்ள படம் இது. நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், சிங்கப்பூரைச் சேர்ந்த நடிகர் ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடித்துள்ளார்.
மேலும், ஜெயம் ரவி மகன் ஆரவ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ‘இந்தியாவின் முதல் விண்வெளிப் படம்’ என்ற பெருமையுடன் இந்தப் படம், அடுத்த மாதம் (ஜனவரி) 26ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
இதைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இந்தப் படத்துக்கு ‘அடங்க மறு’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஹோம் மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ராஷி கண்ணா, ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கிறார்.
,
Happy to announce the title of my next project ‘ADANGA MARU’ ???????? Shooting starts today. God bless us. @theHMMofficial@dirkarthi@sathyaDP@artilayaraja@RaashiKhanna @samcs_music @AntonyLRuben@anandjoy006@shiyamjack@donechannel1#JR24pic.twitter.com/KtNBqGUoEQ
— Jayam Ravi (@actor_jayamravi) December 13, 2017
‘விக்ரம் வேதா’ படத்துக்கு இசையமைத்த சாம் சி.எஸ்., இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஆண்டனி ரூபன் எடிட் செய்கிறார். இது, ஜெயம் ரவியின் 24வது படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.