Advertisment

ஜீவா, ஷாலினி பாண்டே நடிக்கும் ‘கொரில்லா’

இந்தப் படத்தில், ஜீவா ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ ஷாலினி பாண்டே நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘கொரில்லா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jiiva

ஜீவா, ஷாலினி பாண்டே நடிக்கும் படத்திற்கு ‘கொரில்லா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

‘மகாபலிபுரம்’ படத்தை இயக்கிய டான் சாண்டி, அடுத்ததாக ஜீவாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். ஜீவாவின் 29வது படம் இது. இந்தப் படத்தில், ஜீவா ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ ஷாலினி பாண்டே நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘கொரில்லா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி, யோகி பாபு இருவரும் காமெடியன்களாக நடிக்கின்றனர். ‘விக்ரம் வேதா’ படத்துக்கு இசையமைத்த சாம் சி.எஸ்., இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். ரூபன் எடிட் செய்கிறார். அடுத்த மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

ஜீவா தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘கலகலப்பு 2’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஜெய், ‘மிர்ச்சி’ சிவா, கேத்ரின் தெரேசா, நிக்கி கல்ரானி, சதீஷ், வையாபுரி, மனோபாலா, விடிவி கணேஷ், ரோபோ சங்கர், சந்தான பாரதி, காஜல் பசுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். குஷ்பூவின் ‘அவ்னி மூவிஸ்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். காரைக்குடியில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு, காசி மற்றும் ஹைதராபாத்திலும் நடைபெற்றது. வருகிற பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

Tamil Cinema Jiiva Don Sandy Shalini Pandey Gorilla Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment