‘ஜோக்கர்’ ராஜுமுருகன் இயக்கத்தில் நடிக்கிறார் ஜீவா

‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களின் இயக்குநர் ராஜுமுருகனின் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ஜீவா.

‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களின் இயக்குநர் ராஜுமுருகனின் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ஜீவா.

தினேஷ், மாளவிகா நாயர் நடித்த ‘குக்கூ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பத்திரிகையாளர் ராஜுமுருகன். அதன்பிறகு ‘ஜோக்கர்’ படத்தை இயக்கினார். சமூகக் கருத்துள்ள, மக்களுக்குப் பயன்படும் வகையில் தன்னுடைய படங்களை இயக்கும் ராஜுமுருகன், தன்னுடைய மூன்றாவது படத்துக்கான வேலைகளைத் தொடங்கியுள்ளார்.

இந்தப் படத்தில், ஜீவா ஹீரோவாக நடிக்கிறார். ஜீவா நடிப்பில் ‘கலகலப்பு 2’ மற்றும் ‘கீ’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து தற்போது ‘கொரில்லா’ படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார் ஜீவா.

ஒலிம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. மே மாதம் முதல் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்கும் ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் தலைப்பு இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாலா இயக்க இருக்கும் ‘அர்ஜுன் ரெட்டி’யின் தமிழ் ரீமேக்கான ‘வர்மா’ படத்திற்கு வசனம் எழுதுகிறார் ராஜுமுருகன்.

×Close
×Close