/indian-express-tamil/media/media_files/2025/10/12/madhmapatty-2025-10-12-12-49-42.jpg)
சமையல் கலை நிபுணர், நடிகர் மற்றும் தொழில்முனைவோர் எனப் பன்முகங்கள் கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா ஆகியோரின் தனிப்பட்ட உறவுமுறை சமீப காலமாகச் சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்நிலையில் ஜாய் கிரிசில்டா தனது எக்ஸ் பக்கத்தில் பிறக்கப்போகும் குழந்தை பற்றி ஒரு பதிவிட்டுள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவியாக கூறப்படும் ஜாய் கிரிசில்டா இருவரும் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டதாக தனது சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிட்டு உறுதிப்படுத்தினார். திருமண அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, ஜாய் தான் ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார்.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், சட்டப்படி விவாகரத்து பெறாமல் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும், தனது முதல் மனைவிக்குத் தெரிந்தே, அவர்களின் பிரிவுக்குப் பின்னரே இந்தத் திருமணம் நடந்ததாக ஜாய் கிரிசில்டா ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
கர்ப்பமாக இருக்கும் நிலையில் தன்னை ரங்கராஜ் கைவிட்டுவிட்டதாகவும், ஏமாற்றிவிட்டதாகவும் கூறி, ஜாய் கிரிசில்டா காவல்துறையிலும் மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார். இதற்குப் பதிலடியாக, தனது கேட்டரிங் நிறுவனத்தின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் ஜாய் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதைத் தடை செய்யக் கோரி மாதம்பட்டி ரங்கராஜ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இரு தரப்பினரும் நீதிமன்றத்திலும், பொது வெளியிலும் ஒருவருக்கொருவர் எதிராகப் போராடி வருகின்றனர். இந்நிலையில் ஜாய் கிரிசில்டா எக்ஸ் பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், “ பிரசவத்திற்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், மருத்துவர்கள் எனக்குக் கட்டாய படுக்கை ஓய்வை (Complete Bed Rest) அறிவுறுத்தியுள்ளனர். வயிற்றில் இருக்கும் குழந்தை மன அழுத்தத்தில் (Stress) உள்ளது, அதைப் போலவே நானும் இருக்கிறேன். ஒரு தாயாக, நான் என் குழந்தையின் நலனுக்காகத் தனிமையில் போராடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த துயரங்களுக்குக் காரணமான, குழந்தையின் தந்தையான மாதம்பட்டி ரங்கராஜ், ஒரு துளிகூடக் குற்ற உணர்ச்சியோ அல்லது பொறுப்புணர்வோ இன்றி, கவலையின்றித் இருக்கிறார்.
Just a few more weeks left until delivery 🤰⁰The doctor has advised me complete bed rest⁰The baby in the womb is under stress and so is the mother…
— Joy Crizildaa (@joy_stylist) October 12, 2025
And the so-called father? @MadhampattyRR walks around carefree, without an ounce of guilt..without a single thought or sense of… pic.twitter.com/Z3UksEL6SH
நான் அவர் குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கிறேன். உடல் வலியுடனும், உணர்ச்சிபூர்வமான பாதிப்புடனும், எதிர்காலம் குறித்த பயத்துடனும் தனித்து நின்று நான் போராடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், இந்தத் தந்தை காற்று போல மறைந்துவிட்டார். இதுதானா அவருடைய தந்தை குணம்? தனது சொந்தக் குழந்தைக்கும், அந்தக் குழந்தையைச் சுமக்கும் தாய்க்கும் இவ்வளவு மன அழுத்தத்தைக் கொடுக்கும் ஒரு மனிதரால் எப்படி நிம்மதியாகத் தண்ணீர் குடிக்க முடிகிறது? தன் மனைவியும் குழந்தையும் படும் வேதனை தெரிந்தும், அவருக்கு அமைதியாக இருக்க எப்படி முடிகிறது? மனிதத் தன்மையை இழந்த ஒருவரை, மனிதன் என்று அழைக்க முடியுமா?
பிரசவம் நெருங்கும் இந்த நேரத்தில், நான் சமூக ஊடகங்களில் எதையும் வெளியிடக் கூடாது என்று எனக்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார். ஓய்வெடுக்க வேண்டிய, பாதுகாக்கப்பட வேண்டிய என்னையும், தன் பிறக்காத குழந்தையையும் ஓடியாட வைத்து, இந்தச் சட்டச் சிக்கலுக்குள் தள்ளுகிறார். பிறப்பதற்கு முன்பே தன் சொந்தக் குழந்தைக்கு இத்தகைய வலியைத் தரும் ஒரு தந்தை எங்கு இருக்கிறார்? இது எத்தகைய கொடூரமான செயல்!” என்று பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.