‘ஜுங்கா’ ஃபாரீன் ஷெட்யூல் முடிந்து, அடுத்த வாரம் சென்னையில் இரண்டாவது ஷெட்யூல் தொடங்குகிறது.
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி - கோகுல் இணைந்திருக்கும் படம் ‘ஜுங்கா’. விஜய் சேதுபதி ஜோடியாக ‘வனமகன்’ சயிஷா நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினாக ‘மேயாத மான்’ பிரியா பவானிசங்கர் நடிக்கிறார்.
கதைப்படி, பாரீஸில் வசிக்கும் டானாக விஜய் சேதுபதி நடிக்கிறார். அங்கேயே பிறந்து. வளர்ந்த பெண்ணாக சயிஷா நடிக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாரீஸில் நடைபெறும் நிலையில், இத்தனை நாட்களாக அங்கு படப்பிடிப்பு நடந்து வந்தது. சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்ததையடுத்து, சென்னை திரும்புகிறது படக்குழு.
அடுத்த வாரத்தில் இருந்து சென்னையில் ஷூட்டிங் தொடங்குகிறது. இதில், விஜய் சேதுபதி - பிரியா பவானிசங்கர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. இந்த வாரம் சயிஷாவுடன் ரொமான்ஸ் செய்த விஜய் சேதுபதி, அடுத்த வாரம் பிரியா பவானிசங்கருடன் ரொமான்ஸ் செய்யப் போகிறார்.
விஜய் சேதுபதி இதுவரை நடித்ததிலேயே, இதுதான் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம். சுமார் 20 கோடி ரூபாய் பட்ஜெட் என்கிறார்கள். எனவே, பிற தயாரிப்பாளர்களை ரிஸ்க் எடுக்க விடாமல், விஜய் சேதுபதியே படத்தைத் தயாரிக்கிறார். நடிகர் அருண் பாண்டியன் இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை வாங்கியிருக்கிறார்.
‘சூப்பர் டீலக்ஸ்’, ‘96’, ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’, ‘சீதக்காதி’ மற்றும் ஒரு தெலுங்குப் படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தொடர்ந்து, சீனு ராமசாமி இயக்கவிருக்கும் ‘மாமனிதன்’ படத்திலும் நடிக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.