இந்தியா வந்திறங்கியது புதிய 'இசைப்புயல்'....

இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப டிக்கெட் விலையே 4,000 ரூபாயாம்...

இந்தியாவில் தனது முதல் இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக, பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர், மும்பை வந்தடைந்தார்.

மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் ஜஸ்டின் பீபரின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப டிக்கெட் விலையே 4,000 ரூபாயாம். (அடேங்கப்பா!!) முதன்முறையாக இந்தியாவில் இசை நிகழ்ச்சி நடத்தப்போகும் ஜஸ்டினுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாலிவுட் ‘தல’ சல்மான் கானின் பிரபல பாதுகாவலர் ‘ஷெரா’ தான் பீபரின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு பொறுப்பு பெற்றுள்ளார். இன்று மாலை அவரது இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அதன்பின் டெல்லி, ஜெய்ப்பூர், ஆக்ரா என இந்தியாவின் சில இடங்களை அவர் சுற்றிப் பார்க்க உள்ளாராம்.

×Close
×Close