வித்யா பாலன் கேரக்டரில் நடிக்கிறார் ஜோதிகா

வித்யா பாலன் நடித்த ‘துமாரி சுலு’ ஹிந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கில், வித்யா பாலன் நடித்த கேரக்டரில் ஜோதிகா நடிக்க இருக்கிறார்.

வித்யா பாலன் நடித்த ‘துமாரி சுலு’ ஹிந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கில், வித்யா பாலன் நடித்த கேரக்டரில் ஜோதிகா நடிக்க இருக்கிறார்.

வித்யா பாலன் நடிப்பில், சுரேஷ் திரிவேணி இயக்குநராக அறிமுகமான ஹிந்திப் படம் ‘துமாரி சுலு’. பெண்ணை மையப்படுத்திய இந்தப் படத்தில், வித்யா பாலனுடன் சேர்ந்து மனவ் கெளல், நேகா துபியா, மலிஷ்கா மெண்டோன்ஷா ஆகியோரும் நடித்திருந்தனர்.

வித்யா பாலன், ஆர்.ஜே.வாக இந்தப் படத்தில் நடித்திருந்தார். இரவு நேர ஆர்.ஜே.வாகப் பணியாற்றும் ஒரு பெண், தன் குடும்ப வாழ்க்கையையும் வெற்றிகரமாக எப்படி நடத்திச் செல்கிறாள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. குடும்பத் தலைவி ஒருவர் நிகழ்ச்சித் தொகுப்பாளராக நடத்தும் நிகழ்ச்சி, நேயர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறுகிறது. ஃபேமிலி டிராமாவாக இந்தப் படம் உருவானது.

வித்யா பாலனுக்கு, இந்தப் படம் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் மற்றும் ஸ்டார் க்ரீன் ஆகிய விருதுகளைப் பெற்றுத் தந்தது. அத்துடன், சிறந்த அறிமுக இயக்குநருக்காக சுரேஷ் திரிவேணியும், சிறந்த துணை நடிகைக்காக நேகா துபியாவும் ஸ்டார் க்ரீன் விருதைப் பெற்றனர். 20 கோடி ரூபாய் தயாரிப்பில் உருவான இந்தப் படம், 50 கோடி ரூபாயை வசூலித்தது.

‘துமாரி சுலு’ படம், தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. ‘மொழி’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ராதாமோகன், தமிழில் ரீமேக் செய்கிறார். வித்யா பாலன் கேரக்டரில் ஜோதிகா நடிக்கிறார். தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி தயாரிக்கிறது பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா. இந்த நிறுவனம் தற்போது கார்த்திக், கெளதம் கார்த்திக், ரெஜினா ஆகியோர் நடிப்பில் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தைத் தயாரித்து வருகிறது.

×Close
×Close