Advertisment

Jyothika's Jackpot: மீண்டும் போலீஸாக ஜோதிகா!

சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jackpot Review Jackpot full movie Review

Jackpot Review Jackpot full movie Review

Jyothika's Jackpot: திருமணத்திற்குப் பிறகு நடிகை ஜோதிகா, பெண்ணுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார்.

Advertisment

அந்த வகையில் அவர் அடுத்து நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

‘ஜாக்பாட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ‘குலேபகாவலி’ படத்தின் இயக்குநர் கல்யாண் இதனை இயக்குகிறார். ’ஜாக்பாட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகை ரேவதியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படபிடிப்பு ஏற்கனவே முடிந்து விட்டது. இதன் இறுதி நாள் ஷூட்டிங்கில் கூட நடிகர் சூர்யா கலந்துக் கொண்டார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ‘ஜாக்பாட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஜோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment