Advertisment

'யாரை லவ் பண்ணுன? எத்தனை சிகரெட் குடிக்கிற?' பொது மேடையில் ரஜினியை அதிரடியாக நேர்காணல் செய்த பாலச்சந்தர்- வீடியோ

இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் “யாரை லவ் பண்ணுன? எத்தனை சிகரெட் குடிக்கிற?” என்று பொது மேடையில் அதிரடியாக நேர்காணல் செய்த பழைய வீடியோ சமூக ஊடகங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
happy birthday k balachander, k balachander, balachander, கே பாலச்சந்தர், ரஜினிகாந்த், பாலச்சந்தர் ரஜினியிடம் நேர்காணல், பாலச்சந்தர் பிறந்தநாள், k balachandar k balachander rajinikanth, rajinikanth k balachander, rajinikanth

கே. பாலச்சந்தர் மற்றும் ரஜினிகாந்த்

இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் “யாரை லவ் பண்ணுன? எத்தனை சிகரெட் குடிக்கிற?” என்று பொது மேடையில் அதிரடியாக நேர்காணல் செய்த பழைய வீடியோ சமூக ஊடகங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

Advertisment

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ திரைப்படம் வெளியான உடனேயே நடத்தப்பட்ட ஒரு நேர்காணலில், கே பாலச்சந்தர் ரஜினிகாந்திடம் சில கடினமான கேள்விகளைக் கேட்டார்.

மறைந்த இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தருக்கு இன்று 102 வது பிறந்த நாள். இயக்குனர் கே பாலசந்தருக்கு இந்திய சினிமா நிறைய கடன்பட்டிருக்கிறது. இந்தியாவில் இரண்டு ஆஸ்கர் விருது பெற்றவர்கள் இருப்பதற்கு இயக்குனர் கே. பாலச்சந்தரும் ஒரு காரணம். ஏ.ஆர்.ரஹ்மானை தனது நிறுவனம் தயாரித்த ரோஜா மூலம் தமிழில் அறிமுகப்படுத்தினார். எம்.எம். கீரவாணியை தமிழில் அறிமுகப்படுத்தியவரும் அவர்தான். பின்னர், அவர் கோலிவுட் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக மாறினார். அதோடு முடியவில்லை. தமிழ் சினிமாவின் இரண்டு சூப்பர் ஸ்டார்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இப்போது கூட ‘கே.பி.யின் தயாரிப்புகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். பாலச்சந்தர் அவர்களை அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல், அவர் ஒரு வழிகாட்டும் ஆளுமையாகவும் இருந்தார். அவர் இருவரும் வளர்ந்த ஆண்டுகளில் தாக்கத்தை ஏற்படுத்தினார். இரண்டு நட்சத்திரங்களையும் ‘சார்’ என்றோ அல்லது மரியாதைக்குரிய பிற பின்னொட்டுகளோ இல்லாமல் பேசக்கூடிய கடைசி இயக்குனர் அவர்தான்.

2010 இல் நடந்த ஒரு நிகழ்வில் ரஜினிகாந்த் மற்றும் பாலசந்தரின் நேர்காணல் ஒன்று வீடியோ பதிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தனது 40-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் சிறப்பு நிகழ்ச்சி மேடையில் ரஜினிகாந்திடம் தொடர் கேள்விகளைக் கேட்பதற்கு முன் இயக்குனர் கே. பாலச்சந்தர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் “சரி டா!” என்று கூறி தொடங்கினார்.

தொடக்கத்தில், பாலச்சந்தர் ரஜினிகாந்திடம் பழைய காலத்தைப் போல அவரை தனது வழிகாட்டியாகக் கருதுவதாகவும், புதிய இயக்குநர்கள் அவருக்குக் கொடுக்கும் மரியாதையை எதிர்பார்க்க வேண்டாம் என்றும் கூறுகிறார். பின்னர் அவர் ரஜினியிடம் சில கடினமான கேள்விகளைக் கேட்கிறார். இது வேறு எந்த நேர்காணலுக்கும் சாத்தியமில்லை. அந்த நேர்காணலில் இந்த மாதிரி கே. பாலச்சந்தர் கேட்கிறார், “ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட்டுகள் பிடிக்கிற?” இந்த கேள்விக்கு வெட்கப்பட்ட ரஜினிகாந்த், “அதை இப்ப ரொம்ப கம்மி பண்ணிட்டேன்” என்கிறார். “தயவுசெய்து அதை முழுசா விட்டுரு, அது வேண்டாம்” நானே சிகரெட் புடிச்சவந்தான், என்னை சிகரெட்டும் கையுமா நீயே பார்த்திருக்க, ஆனால், நான் விட்டுட்டேன், நீயும் விட்டுரு” என்று கே.பி. பதில் சொல்கிறார்.

அதே போல, “நீ கண்டக்டராக இருக்கும்போது யாரையாவது லவ் பண்ணியிருக்கிறாயா?” என்று கே. பாலச்சந்தர் கேள்வி கேட்கிறார். அதற்கு ரஜினி “லவ் பண்ணியிருக்கிறேன்” என்று கூறுகிறார். “அவங்க யார் பேர் சொல்ல முடியுமா?” என்று கே.பி. கேட்டதற்கு “உங்களிடம் தனியாக சொல்கிறேன்” என்று ரஜினிகாந்த் கூறுகிறார்.

அதே போல உங்களுக்கு பிடித்த இயக்குனர் யார் என்ற கேள்விக்கு ரஜினிகாந்த், இயக்குனர் மகேந்திரன் பெயரைக் கூறினார்.

ஒரு சந்தர்ப்பத்தில், பாலசந்தர் கேட்கிறார், உங்கள் வாழ்நாளில் நீங்கள் சந்தித்த ஒரு பெரிய சங்கடத்தை என்னிடம் சொல்ல முடியுமா? ரஜினிகாந்த், “கருத்து இல்லை. நான் இது பற்றி பேச விரும்பவில்லை.” மற்றொரு சந்தர்ப்பத்தில், ரஜினிகாந்த் தனது அப்போதைய வருங்கால மனைவி லதாவை அறிமுகப்படுத்திய நேரத்தைப் பற்றி அவரது குரு பாலசந்தர் கேட்கும்போது உணர்ச்சிவசப்படுகிறார்.

ரஜினி தனது படங்களில் பணிபுரியும் போது எப்போதாவது இவர் கிட்ட வந்து மாட்டிக்கிட்டோமே என்று வருத்தப்பட்டது உண்டா என்று கே.பி. வேடிக்கையாக கேட்ட கேள்விக்கு, “நிறைய தடவை” என்று தட்டிக் கழிக்காமல் ரஜினி செல்கிறார். அரங்கமே முழுவதும் சிரிப்பொலியால் பிரகாசிக்கிறது.

இந்த உரையாடலின்போது கே.பாலச்சந்தர் தனது வருத்தம் ஒன்றை ஒப்புக்கொள்ள வழிவகுத்தது. அவர்கள் (1977) படப்பிடிப்பில் ரஜினிகாந்த் அவரை கடுமையாக திட்டிவிட்டு சென்றது உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று அவர் கேட்கிறார். சூப்பர் ஸ்டார், “ரொம்ப நல்ல நினைவிருக்கு” என்று பதிலளித்தார். பின்னர் கே.பி. மேலும் கூறுகிறார், “அன்று நான் உங்களிடம் மிகவும் கடுமையாக திட்டிவிட்டேன், அதன்பிறகு படப்பிடிப்பில் இருந்து வெளியேறினேன். இப்போது, நீ வளர்வதைப் பார்க்கும் போதெல்லாம் அந்த நாள் ஞாபகம் வருகிறது. எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன், 'அப்போது நீ அவரை திட்டிவிட்டாய், அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று பார்” என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன்.

இந்த நேர்காணல் எப்படி எல்லாம் மாறியிருக்கிறது என்பதை நினைவூட்டுகிறது. ஒரு இயக்குனருக்கும் நடிகருக்கும் இடையில் இதுபோன்ற புரிதல் இப்போது இருக்க முடியாது. ஏனெனில் அந்த நாளில் திரைப்பட இயக்குனர்கள் மரியாதை நிகழ்காலத்திலிருந்து வேறுபட்டது. வழிகாட்டுதல் இப்போது தோழமையால் மாற்றப்பட்டுள்ளது. இது இந்த உரையாடலை மேலும் சிறப்பானதாக்குகிறது, ஏனெனில் இது கடந்த காலத்தை நினைவூட்டுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment