இரும்பின் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கே.ராஜன், தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது,
"நான் இரண்டு மாதங்களாக கதர் மற்றும் கைத்தறி ஆடைகளை அணிவதால், இந்நிகழ்ச்சியில் போர்வை வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு பதிலாக புத்தகம் கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். இந்நிகழ்ச்சியின் வைத்திருப்பது ஜிகினா ஆடை, இதனால் ஒரு உபயோகமும் இல்லை.
ஈரோடு, சேலம், கோயம்பத்தூர், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள நெசவாளர்கள் தேய்க்கும் அந்த கதர் ஆடைகளை வாங்கி உபயோகிங்கள். அவை இங்கு வைக்கப்படும் ஆடைகளை விட விலை மலிவாக தான் இருக்கும்.
ஆனால், சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்திக்க சென்றபோது, நான் ஜிகினா நிறைந்த ஆடையை வாங்கி சென்றுவிட்டேன். அதை நான் வாங்கி சென்றதால், மேடையிலேயே ரூ.5000 பைன் கட்டிவிட்டேன்.
அந்த தொகையை ஏழை வியாபாரிகளுக்கு நன்கொடையாக கொடுங்கள் என்று திருமாவளவனை கேட்டுக்கொண்டேன்", என்று தனது கொள்கையின் பிடிப்பு பற்றி பேசினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil