'காலா' திரைப்படம்: வழக்கை அபராதத்துடன் தளுள்ளுபடி செய்ய வேண்டும்: வுண்டர்பார் பதில்மனு

நடிகர் ரஜினி போன்ற பெரிய நடிகரின் படத்துக்கு தடை கேட்டால் பிரபலமாகலாம் என்ற விளம்பர நோக்கிலேயே இந்த வழக்கு போடப்பட்டுள்ளது.

விளம்பர நோக்கில் காலா திரைப்படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அபராதத்துடன்  தள்ளுபடி செய்ய வேண்டும் என நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தனது கதையை திருடி கரிகாலன் என்ற அடைமொழியுடன் ‘காலா’ திரைப்படத்தை எடுப்பதற்கும் அதனை வெளியிடவும் தடை விதிக்க கோரிய சென்னையை சேர்ந்த ராஜசேகர் என்பவர் சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய நடிகர் ரஜினி, காலா படத்தின் இயக்குனர் ரஞ்சித், படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றிக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் தனுஷின் பட தயாரிப்பு நிறுவனமான வுண்டார்பார் நிறுவனத்தின் இயக்குனர் வினோத்குமார் அனைத்து எதிர் மனுதார்கள் சார்பாக பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் காலா என்ற படத்தை கடந்த மே மாதம் பதிவு செய்தாகவும். காலா படத்தின் கதையை யாரிடமிருந்தும் திருடவில்லை நாங்கள் காலா என்ற தலைப்பையே வைத்துள்ளோம் ஆனால் மனுதாரர் கரிகாலன் என்ற தலைப்பை வைத்துள்ளார். 

காலா படம் மும்பையை சேர்ந்த நிழலுலக தாதாவை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை ஆகும். மனுதாரர் தலைப்பை பதிவு செய்து ஓர் ஆண்டுக்குள்ளாக படத்தை எடுக்க வேண்டும் ஆனால் அவர் அதை செய்யவில்லை, மேலும் கடந்த 2006-ம் ஆண்டுக்கு பின் அந்த தலைப்பை அவர் புதுப்பிக்கவில்லை, எனவே மனுதரர் இந்த தலைப்பை உரிமை கோர முடியாது.

நடிகர் ரஜினி போன்ற பெரிய நடிகரின் படத்துக்கு தடை கேட்டால் பிரபலமாகலாம் என்ற விளம்பர நோக்கிலேயே இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. நடிகர் ரஜினியை 1991-92 ஆண்டுகளில் பலர் சந்தித்துள்ளனர். அனைவரையும் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாத காரியம். மேலும் காப்புரிமை மீறியதாக உயர்நீதிமன்றத்தை தவிர வேறெந்த நீதிமன்றத்தையும் அணுக முடியாது.

இந்த வழக்கில நடிகர் ரஜினியை ஒரு தரப்பாக சேர்க்க  அவசியமில்லை, மேலும் இந்த கதையை அவரிடம் மனுதாரர் கூறவில்லை. காலா படம் 160 கோடி ரூபாயில் செலவில் தயாரிக்கப்படுகிறது, அதை 2018-ம்  ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளோம். எனவே உள்நோக்கத்துடனும், விளம்பரம் தேடுவதற்காக இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரியுள்ளனர்.

இதனை அடுத்து வழக்கின் விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close