/tamil-ie/media/media_files/uploads/2018/02/a332.jpg)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா திரைப்படம் ஏப்ரல் 27ம் தேதி வெளியாக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் அறிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரீலிஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமில்லாத தகவல் வெளியானது. இந்த நிலையில், காலா படத்தின் ரிலீஸ் தேதி இன்று இரவு 7 மணிக்கு அறிவிக்கப்படும் என நடிகர் தனுஷ், மாலையில் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதன்படி, சரியாக ஏழு மணிக்கு ரஜினியின் அட்டகாசமான போஸ்டருடன் படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 27 என அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் அறிவித்துள்ளார். மேலும், 'டான்களின் டான் மீண்டும் திரும்பியுள்ளார்' என்றும் தனுஷ் ட்வீட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து காலா தற்போது டிரெண்டாகி வருகிறது.
Mark the date !! #kaalaa#april27 the don of dons is back #Superstar#thalaivarpic.twitter.com/FMakkwM5ee
— Dhanush (@dhanushkraja) 10 February 2018
சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.