New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/12/rajinikanth.jpg)
Kaala Trailer Released, Rajinikanth Fans Enjoyed
Kaala Trailer Released, Rajinikanth Fans Enjoyed
நேற்றிரவு வெளியிடப்பட்ட ரஜினிகாந்தின் ‘காலா’ பட போஸ்டர், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக நடித்துவரும் படம் ‘காலா’. வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பில் தனுஷ் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். ஹுமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, நானா படேகர், அஞ்சலி பட்டில் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் ‘காலா’ படத்துக்கு முரளி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகப் பணியாற்றுகிறார். இதன் படப்பிடிப்பு மும்பை மற்றும் சென்னை ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் நடைபெற்றது.
ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘காலா’ படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘2.0’, ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதி ரிலீஸாக வேண்டிய ‘2.0’, கிராபிக்ஸ் பணிகள் தாமதமாவதால் தள்ளிப் போகிறது. எனவே, ‘காலா’ ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ரஜினிக்கு 67வது பிறந்த நாள். அதை முன்னிட்டு, நேற்று இரவு 12 மணிக்கு ‘காலா’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டது. உடல் முழுக்க கறுப்பு சாயம் பூசி, கறுப்புநிற சட்டை மற்றும் கறுப்பு கூலிங் கிளாஸுடன் அசத்தலாக அந்த போஸ்டரில் காட்சியளிக்கிறார் ரஜினிகாந்த். முழுவதும் கறுப்பாக இருக்கும் அந்த உடலில், வெள்ளை நிற தாடி அவ்வளவு அழகாக இருக்கிறது. அந்த போஸ்டர்தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.