/tamil-ie/media/media_files/uploads/2018/02/a328.jpg)
ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று இரவு ஏழு மணிக்கு வெளியாகும் என தனுஷ் தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கியுள்ள 'காலா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் நடித்துள்ள 2.0 படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் இன்னும் நிறைவு பெறாததால் படத்தின் வெளியீடு தள்ளிப்போகிறது. படம் முழுமையாக முடிவடைய இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதனால், காலா படம் அதற்கு முன்னதாக வெளியாகும் என தகவல்கள் வெளியாகின.
Wunderbar films, Superstar Rajinikanth’s #kaalaa release date will be announced by 7 pm today with a #mass + #style = #RAJINI poster .. Thalaivar fans, get ready to CELEBRATE ????
— Dhanush (@dhanushkraja) 10 February 2018
இந்த நிலையில், இன்று தனுஷ் தனது ட்விட்டரில் இதுகுறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "வொண்டர்பார் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று இரவு ஏழு மணிக்கு வெளியாக உள்ளது. ரஜினியி புதிய மாஸ் ஸ்டைல் போஸ்டரும் இதனுடன் வெளியாகிறது. தலைவரின் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்" என்று தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.