ஹைதராபாத்தில் 'காலா' பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு: 'என்றுமே ஒரே ரஜினி தான்; ஒரே சிரஞ்சீவி தான்' - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Kaala Press Meet: 'காலா' திரைப்படத்தின் தெலுகு பிரஸ் மீட்

Kaala Press Meet LIVE UPDATES: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘காலா’ திரைப்படத்தின் தெலுகு பிரஸ் மீட்.

&

Kaala Press Meet LIVE UPDATES: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தெலுங்கில் வெளியாகவிருக்கும் ‘காலா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் நிகழ்வுகளை அறிய ‘ஐஇ தமிழ்’ லைவ் அப்டேட்டில் இணைந்திருங்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம், ஜூன் 7-ம் தேதி ரிலீசாகிறது. இதற்கான டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கியது. இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு ரிலீசுக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று மாலை 06.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றுள்ளார்.

Kaala movie LIVE UPDATES: காலா திரைப்படத்தின் தெலுங்கு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு தொடர்பான லைவ் அப்டேட் செய்திகள் இங்கே!

இரவு 07.25 – இயக்குனர் பா. ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அரங்கிற்குள் வந்தனர்.

இரவு 07.33 – தமிழகத்தில் நடைபெற்ற காலா இசை வெளியீட்டு விழாவின் தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது.

இரவு 07.46 – காலா பாடல்களின் வீடியோ கிளிப்பிங்க்ஸ் ஒளிபரப்பப்பட்டது.

இரவு 07.48 – காலா படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் அரங்கத்திற்கு வந்தார்.

இரவு 07.50 – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரங்கிற்கு வந்தார்.

இரவு 08.00 – முதலில் பேசிய தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், “நான் தெலுங்கில் அருணாச்சலம், நரசிம்ஹா(படையப்பா) என இரு படங்களை ரிலீஸ் செய்துள்ளேன். இப்போது காலா படத்தை ரிலீஸ் செய்கிறேன். காலா படத்தில் நல்ல மெசேஜும் உள்ளது. ரஜினி நம் அனைவருக்கும் முன்மாதிரி” என்றார்.

இரவு 08.05 – நடிகை ஈஸ்வரி ராவ் பேசுகையில், “எனது வாழ்வில் சிறந்த கதாபாத்திரம் என்று ஒன்று இருந்தால், அது காலா படத்தில் வரும் பாத்திரம் தான். தனுஷ், பா.ரஞ்சித், ரஜினி அவர்களுக்கு நன்றி” என்றார்.

இரவு 08. 07 – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசுகையில், “ஸ்லம் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையைப் பற்றி பேசும் படமாக இது இருக்கும். தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது, வசிக்க நிறைய பேருக்கு சொந்த நிலம் கிடையாது. அதைப் பற்றி இப்படம் அதிகம் பேசும். இப்படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்தற்கு நன்றி” என்றார்.

இரவு 08.10 – இயக்குனர் பா.ரஞ்சித் பேசுகையில், “குப்பத்து மக்களின் வாழ்க்கையை ரஜினியிசம் கொண்டு படமாக்கியுள்ளோம். நிலப் பிரச்சனை பற்றி இப்படத்தில் பேசியுள்ளோம். நிச்சயம் இப்படத்தில் நாங்கள் பேசிய அரசியலை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்” என்றார்.

இரவு 08.20 – தயாரிப்பாளர் தனுஷ் பேசுகையில், “காலா மக்களின் படம். மக்களுக்கான படம். ஒரு தைரியமான, அதிகம் ஆராய்ந்து எடுக்கப்பட்ட படம். நாற்பது வருடங்களுக்கும் மேலாக, ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் என்றால் அதுதான் ரஜினிகாந்த். நடிக்க வருபவர்களில் பெரும்பாலானோர், சூப்பர்ஸ்டார் ஆக வேண்டும் என்றே வருகிறார்கள். ஆனால், என்றுமே சூப்பர்ஸ்டார் ஒருவர் மட்டும் தான். அது ரஜினிகாந்த் தான். தெலுகு சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் நிச்சயம் இப்படத்தை வெற்றிப் பெற வைப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.

இரவு 08.25 – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசுகையில், “78-ல் முதல் படத்தில் நடித்தேன்.அதன் பிறகு நிறைய படங்களில் நடித்த பிறகு, தெலுகு சினிமாவில் கவனம் செலுத்துவதா, அல்லது தமிழ் சினிமாவில் கவனம் செலுத்துவதா என குழப்பம் ஏற்பட்டது. ஆனால், என்னை அறிமுகம் செய்த பாலச்சந்தர் தமிழர் என்பதால், நான் தமிழிலேயே படங்களை தொடர்ந்தேன். ஆனால், இன்னமும் தமிழில் என்னை எந்தளவு ரசிகர்கள் விரும்புகிறார்களோ, அதே போல தெலுகு ரசிகர்களும் என்னை நேசிக்கிறார்கள். தனுஷ் சொன்னார் ஒரே ரஜினி தான் என்று. ஒரே சிரஞ்சீவி தான்.. ஒரே வெங்கடேஷ் தான்… ஒரே நாகர்ஜுனா தான். எல்லோருக்கும் தனி அடையாளங்கள் உள்ளது. வாய்ப்புகள் வரும் போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்கள் ஜெயிக்கிறார்கள்.

நான் காலா படத்தை இரண்டு முறை பார்த்தேன். இது கமர்ஷியல் படம் மட்டுமல்ல… நல்ல மெசேஜ் உள்ள படமும் கூட.. இயக்குனர் ரஞ்சித் அவரது ஸ்டைலில் ஒரு தரமான கமர்ஷியல் படத்தை எடுத்துள்ளார். காலா படத்தில் ஹீரோவுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்படவில்லை. இப்படத்தில் ஒரு ஐந்தாறு கேரக்டர்கள் உள்ளன. அவையனைத்தும் நீங்கள் படம் பார்த்து வெளியே வந்த பிறகு கூட உங்கள் மனதில் இருக்கும். உங்கள் ஊரு நடிகை ஈஸ்வரி ராவ் இதில் நடித்துள்ளார். நல்ல நடிகை. அர்பணிப்பான நடிகை. தனுஷ் நல்ல நடிகர் மட்டுமல்ல.. நல்ல தயாரிப்பாளரும் கூட. இப்படம் நிச்சயம் வெற்றிப் பெறும் என்பதில் சந்தேகமில்லை” என்றார். (இவையனைத்தையும் ரஜினி முழுக்க தெலுங்கிலேயே பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது).

×Close
×Close