Kaappaan Review: எந்த நடிகருமே நம்மள காப்பாத்தாத கெட்ட கனவு ‘காப்பான்’!

Suriya - KV Anand: காப்பானில் உள்ள கதாபாத்திரங்கள் அர்த்தமுள்ள எதையும் செய்யவில்லை. 

எஸ்.சுபகீர்த்தனா

Kaappaan Review: இயக்குநர் கே.வி ஆனந்த் இயக்கத்தில் ’அயன், மாற்றான்’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் சூர்யா நடித்து வெளியாகியிருக்கும் படம் ‘காப்பான்’. இதில் மோகன் லால், பொம்மன் இரானி, சாயிஷா, ஆர்யா, பூர்ணா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இந்தியப் பிரதமராக படத்தில் வரும் சந்திரகாந்த் வர்மா (மோகன்லால்) சர்வதேச உறவுகள் குறித்து விவாதிக்க வேண்டிய கூட்டத்தில் கலந்துக் கொள்கிறார். அப்போது அங்கு கலந்து கொண்ட மற்ற பிரதிநிதிகள் குழுவிடம் ‘காதல்’ மற்றும் ‘திருமணம்’ தொடர்பான கேள்விகளைக் கேட்கிறார். பின்னர் தனது பாதுகாப்புக் காவலர் கதிரின் (சூர்யா) தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைந்து, அவரது காதல் வாழ்க்கையைப் பற்றிக் கேட்க ஆர்வமாகிறார்.

காப்பானின் தொடக்கக் காட்சியில், ஓடும் ரயிலில் குண்டு வைக்கிறார் சூர்யா. பின்னர், கதிர் என்ற அவரது கதாபாத்திரத்தின் ஃப்ளாஷ்பேக் காட்டப்படுகிறது. படத்தில் வரும் அனைத்து நேர்மறை கதாநாயகர்களும் இயற்கை விவசாயம் செய்பவர்களாக காட்டப்பட்டிருக்கிறார்கள். கதிரும் அதையே செய்கிறார். இது ஒரு அருமையான வேலை என்பதைக் காட்ட தமிழ் சினிமா ஏன் இவ்வளவு ஆசைப்படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை.

இந்த விமர்சனத்தைப் போலவே, கே.வி.ஆனந்தின் ’காப்பான்’ முரண்பட்டிருக்கிறது. ஒரு கதாபாத்திரம் ஏன் ஒரு குறிப்பிட்ட வழியில் நடந்துகொள்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. சந்திரகாந்தின் மகன் அபிஷேக் (ஆர்யா) தனது தந்தையுடன் அலுவலக கூட்டங்களில் எல்லாம்  சாதாரணமாக வருகிறார்.

காப்பானில் உள்ள கதாபாத்திரங்கள் அர்த்தமுள்ள எதையும் செய்யவில்லை. இந்தத் திரைப்படத்தில் வணிக ரீதியான பயணத்தின் கட்டாயமான ஸ்டண்ட், மொக்கை நகைச்சுவை மற்றும் தவறான இடத்தில் வைக்கப்பட்ட ரொமான்ஸ் ஆகியவைகள் உள்ளன.

‘மறக்க முடியாத இரவுக்கு நன்றி!’ என்று அஞ்சலிக்கு ஒரு குறிப்பை எழுதி விட்டுச் செல்கிறார் கதிர். கதிரின் நண்பர் ஜோசப் (சமுத்திரகனி), “ஒரு பெண் எதுவும் செய்ய வேண்டாம் என்று சொன்னால், அது உண்மையில் செய் என்பதற்கான அர்த்தம்” என்று கூறுகிறார். இப்படி தீவிரத்தன்மை இல்லாத வசனங்கள் காப்பானில் திணிக்கப்பட்டிருக்கின்றன.

காப்பானில் உள்ள இன்னொரு பிரச்னை என்னவென்றால், நம்மை வியக்க வைக்கும் விஷயம் எதுவும் இல்லை. அந்த வகையில், ஒரு படத்திற்கான டென்சனை காப்பான் கொடுக்கவில்லை. படத்தின் கதை நேர்மையற்றதாகவும், தர்க்கத்தை மீறும்படியாகவும் உள்ளது.

சூழலை உருவாக்குவதற்காக படத்தை நிறைய ப்ராப்ஸால் நிரப்புகிறார் கே.வி.ஆனந்த். படம் முற்றிலும் செயற்கைத்தன்மையுடன் எழுதப்பட்டுள்ளது. மோகன்லால் பேசும் விதம், சூர்யா – சயீஷா காதல் மற்றும் பல விஷயங்கள் செயற்கைத்தன்மையாக தெரிகிறது.

இந்தப் படத்தில் பொம்மன் இரானி, சமுத்திரகனி, பூர்ணா, உமா பத்மநாபன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் மோசமாக அரங்கேறிய ஸ்கூல் டிராமா போல திரைக்குள்ளும் வெளியிலும் வந்து போகிறார்கள்.

காப்பான் படத்தைப் பொறுத்தவரை, திரையில் நடக்கும் விஷயங்கள் எதற்காக, என்பதைப் பற்றிய உணர்வை நாம் ஒருபோதும் பெற மாட்டோம். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்காக நீங்கள் இந்தப் படத்தைப் பார்த்தால், சீரியஸான ‘ஹார்ட் பிரேக்கிற்கு’ நீங்கள் ஆளாவீர்கள், என்னை நம்புங்கள். உச்சத்தில் இருக்கும் சிறந்த நடிகர் கூட ஒரு மெல்லிய-கட்டமைக்கப்பட்ட படத்தில் தொலைந்து போவதை இப்படம் வெளிக்காட்டுகிறது.

இதனை ஆங்கிலத்தில் படிக்க Kaappaan movie review: A nightmarish film that no star can save

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close