கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. பாண்டிராஜ் இயக்கிவரும் இந்தப் படத்தை, சூர்யாவின் ‘2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. ‘வனமகன்’ சயீஷா, பிரியா பவானிசங்கர், அர்த்தனா என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். கார்த்தியின் அக்காள்களாக மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி என ஐந்து பேர் நடிக்க, அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார். கலை இயக்குநராக வீரசமர் பணியாற்றுகிறார். ஐந்து அக்காள்களுக்கு கடைசி தம்பியாக கார்த்தி நடிப்பதால், இந்தப் படத்துக்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.