”ஜெயலலிதா வேடத்தில் நான் நடிக்கவில்லை” - காஜல் அகர்வால் திட்டவட்டம்

நடிகர் என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறுப் படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிப்பதாக வந்த தகவலை அவர் மறுத்துள்ளார்.

நடிகர் மற்றும் முன்னால் முதல் என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிப்பார் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜெயலலிதாவாக நடிக்க காஜல் அகர்வால் தேர்வு செய்யப்பட்டதாக வந்த தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மறைந்த ஆந்திர முதல்வர் மற்றும் நடிகருமான என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு திரைப்படம் தயாரிக்கப்பட உள்ளது. இந்தத் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்தில் நடிக்க நடிகைகளுக்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இப்படத்தின் ஆரம்ப பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது.

இந்தத் திரைப்படத்தில் என்.டி.ஆரின் கதாப்பாத்திரத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். என்.டி.ஆரின் மனைவி கதாப்பாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகை வித்யா பாலனிடம் பேசப்பட்டு வருகிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதற்கு நடிகைகளை ஒப்பிட்டுத் தேர்வு செய்து வந்தனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் வேடத்தில் நடிக்க காஜல் அகர்வால் தேர்வாகியுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தத் தகவலை நடிகை காஜல் அகர்வால் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கேட்டபோது “படத்தின் நடிகர்கள் தேர்வு இன்னும் முடியவில்லை. எனவே நான் நடிப்பதாக வந்த செய்தி வெறும் வதந்தி. நான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை.” என்று கூறிவிட்டார்.

மறைந்த தமிழக முதல்வர் மற்றும் நடிகையுமான ஜெயலலிதா, என்.டி.ஆருடன் சில படங்களில் நடித்துள்ளார். எனவே ஜெயலலிதா கதாப்பாத்திரமும் இப்படத்தில் காட்டப்பட உள்ளது. எனவே படக்குழு ஜெயலலிதாவின் கதாப்பாத்திரத்தில் நடிக்க யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் இருந்து வருகிறது இத்திரைப்பட குழு.

×Close
×Close