சுந்தர்.சி இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான படம் ‘கலகலப்பு’. இந்தப் படத்தில் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா நடித்திருந்தனர். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியுள்ளது.
சுந்தர்.சி இயக்கியுள்ள ‘கலகலப்பு 2’ படத்தில், ஜெய், ஜீவா, மிர்ச்சி சிவா, நிக்கி கல்ரானி, கேத்ரின் தெரேசா, சதீஷ், வையாபுரி, மனோபாலா, விடிவி கணேஷ், சந்தான பாரதி, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இந்தப் படத்துக்கு இசையமைக்க, சுந்தர்.சி.யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படம், தியேட்டர்கள் கிடைக்காததால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.