விஜய் டிவியின் புதிய சீரியல் ‘கல்யாணமாம் கல்யாணம்’

விஜய் டிவியில் ‘கல்யாணமாம் கல்யாணம்’ என்ற புதிய சீரியல், வருகிற 29ஆம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

விஜய் டிவியில் ‘கல்யாணமாம் கல்யாணம்’ என்ற புதிய சீரியல், வருகிற 29ஆம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

நாயகி கமலி, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண். வாழ்க்கையில் மிகவும் நம்பிக்கை கொண்டவள். திருமணம் மற்றும் சடங்குகள் மீது அதீத நம்பிக்கையுடன் இருப்பவள். ஆனால், நாயகன் சூர்யாவோ பணக்கார வீட்டு குடும்பத்தைச் சேர்ந்தவன். கல்யாண வாழ்க்கையில் துளி கூட நம்பிக்கை இல்லாதவன்.

சூர்யாவின் பெற்றோர்கள் இருபது வருடங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். எனவே, தாத்தாவின் அரவணைப்பில் வளர்கிறான் சூர்யா. கமலியின் எளிமைக் குணத்தைக் கண்டு வியக்கும் சூர்யாவின் தாத்தா, அவனுக்கு கமலியைத் திருமணம் செய்துவைக்க நினைக்கிறார்.

திருமணத்தில் விருப்பமே இல்லாமல் இருக்கும் சூர்யா இதற்கு சம்மதிப்பானா? சூர்யா – கமலி இடையே காதல் மலருமா? என்பதுதான் இந்த சீரியலின் கதை.

கமலியாக விஜய் டிவியின் ‘7சி’ சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்த ஸ்ரீத்து நடிக்கிறார். சூர்யாவாக தேஜா நடிக்கிறார். பிரபல இயக்குநர்கள் ஆர்.சுந்தர்ராஜன் மற்றும் மெளலி இருவரும் இந்த சீரியலில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிரம்மா இந்த தொடரை இயக்குகிறார்.

வருகிற 29ஆம் தேதி முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.

×Close
×Close