/tamil-ie/media/media_files/uploads/2017/12/vishwaroopam-2.jpg)
அமெரிக்காவில் சவுண்ட் மிக்ஸிங் முடிந்ததை அடுத்து, ‘விஸ்வரூபம் 2’ விரைவில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கமல்ஹாசன் இயக்கத்தில், கமல்ஹாசன், ராகுல் போஸ், பூஜா குமார், ஆன்ட்ரியா நடிப்பில் 2013ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘விஸ்வரூபம்’. முதல் பாகத்தை இயக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான சில காட்சிகளையும் சேர்த்து ஷூட் செய்து வைத்திருந்தார் கமல்ஹாசன். எனவே, உடனடியாக இரண்டாம் பாகம் தயாரானது. ஆனால், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்னையால், படம் பாதியிலேயே நின்றது.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கமல்ஹாசன், ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து ‘விஸ்வரூபம் 2’ படத்தை வாங்கி போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை ஆரம்பித்தார். அப்போதுதான் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் கமல்ஹாசன் பங்கு பெற்றார். ‘பிக் பாஸ்’ முடிந்ததும் படத்தின் மீதமுள்ள காட்சிகளை ஷூட் செய்வார்கள் என்று நினைத்தால், திடீரென தீவிர அரசியலில் இறங்கிவிட்டார்.
எனவே, இப்போதைக்குப் படம் ரிலீஸாகாது என நினைத்துக் கொண்டிருந்த வேளையில், கடந்த மாதம் சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்கி, மீதமுள்ள காட்சிகளை முடித்துவிட்டார் கமல்ஹாசன். அதை முடித்த கையோடு, உடனடியாக அமெரிக்கா சென்று சவுன்ஸ் மிக்ஸிங் பணிகளையும் முடித்துவிட்டார். எனவே, விரைவில் படம் ரிலீஸாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
VR 2 looking great sounding great. Thanks to all techies who are making it possible. (From L to R) In picture Marty, I, Kunal and Chris. The screen has my late brother's name as the producer. Would have sent him this pic. first had he been around. pic.twitter.com/o7KXZJsZSV
— Kamal Haasan (@ikamalhaasan) 22 December 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.