Advertisment

பிரபாஸ் படத்தில் கமல்ஹாசன்: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் பிரபாஸ் படத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Kamal Haasan is co-starring in Prabhas new film

நடிகர் கமல்ஹாசன், பிரபாஸ்

பாகுபலி மற்றும் பாகுபலி 2ஆம் பாகத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபாஸ் பான் இந்தியா ஸ்டாராக மாறிவிட்டார்.

இதனால் இவருக்கு சம்பளம் மட்டுமே ரூ.100 கோடிக்கும் மேல் பேசப்படுகிறது. மேலும் இவரின் படங்களும் ரூ.500 கோடி வசூலை எட்டிவிடுகின்றன.

Advertisment

சமீபத்தில் வெளியான இவரின் ஆதிபுருஷ் படத்தில் பல விமர்சனங்கள் எழுந்த போதிலும் படம் ரூ.450 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு தற்போது தற்காலிகமாக பிராஜெக்ட் கே எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸுடன் உலக நாயகன் கமல்ஹாசன், பாலிவுட் பிக் பி அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் எனப் பலர் நடிக்கிறார்கள்.

படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். இந்தப் படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kamal Haasan Prabhas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment