கமல்ஹாசன் பாடிய கிளாஸிக்கல் பாடல்

‘விஸ்வரூபம் 2’ படத்துக்காக கிளாஸிக்கல் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் கமல்ஹாசன்.

‘விஸ்வரூபம் 2’ படத்துக்காக கிளாஸிக்கல் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் கமல்ஹாசன்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
கமல்ஹாசன் பாடிய கிளாஸிக்கல் பாடல்

‘விஸ்வரூபம் 2’ படத்துக்காக கிளாஸிக்கல் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் கமல்ஹாசன்.

Advertisment

கமல்ஹாசன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘விஸ்வரூபம் 2’. 2013ஆம் ஆண்டு வெளியான ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது தயாராகியுள்ளது. கமல்ஹாசனோடு இணைந்து ராகுல் போஸ், பூஜா குமார், ஆன்ட்ரியா, ஷேகர் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘விஸ்வரூபம்’ படத்தை எடுக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான 40 சதவீத காட்சிகளைப் படமாக்கிவிட்டார் கமல்ஹாசன். ஆனாலும், படம் தொடங்கி சில வருடங்கள் ஆகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

‘விஸ்வரூபம் 2’ படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் அருமையான கிளாஸிக்கல் பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார் கமல்ஹாசன். முதல் பாகத்தில் சங்கர் மகாதேவனோடு இணைந்து ‘உன்னைக் காணாமல்...’ பாடலைப் பாடியிருந்தார் கமல்ஹாசன். அந்தப் பாடல் சூப்பர் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்திலும் கிளாஸிக்கல் பாடலைப் பாடியிருக்கிறார் கமல்ஹாசன்.

Advertisment
Advertisements

‘கமல் சார் கர்நாடிக் மற்றும் ஹிந்துஸ்தானி இசையில் புலமை பெற்றிருக்கிறார்’ என இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து பாதியில் நிற்கும் ‘சபாஷ் நாயுடு’ படத்தைத் தொடங்க இருக்கிறார் கமல்ஹாசன். அதன்பிறகு ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கிறார்.

Tamil Cinema Ghibran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: