கமல் – சரிகா காதல் : பலரும் அறியாத ரகசிய காதல் கதை

Kamal – Sarika love story : வாழ்வில் வலிகளை மட்டுமே கண்டு வந்த சரிகாவின் வாழ்வில் கமலின் காதலும், உறவும் வாழ்வின் மற்றொரு பக்கத்தை காண்பித்தது

kamalhaasan, sarika, love,marriage, shruti haasan, akshara haasan, cinema, sivajiganeshan
kamalhaasan, sarika, love,marriage, shruti haasan, akshara haasan, cinema, sivajiganeshan, கமல்ஹாசன்,சரிகா, காதல், திருமணம், ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன். சினிமா, சிவாஜிகணேசன்

வளர்ந்த சூழல் என்று காண்கையில் கமல், சரிகா இருவரும் ஒரே மாதிரியான சூழலில் வளர்ந்தவர்கள் தான். ஆனால், பெற்றோர் வளர்ப்பு தான் வெவ்வேறு விதமாக அமைந்திருந்தது. கமலை போலவே சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அசத்தியவர் சரிகா.

சரிகாவின் பொழுதுபோக்கு, பேரார்வங்களில் ஒன்று படிப்பது. புத்தகங்கள் படிப்பதில் அதிக ஈடுபாடு காண்பிப்பார் சரிகா. ஒருமுறை புத்தகங்கள் வாங்க 1500 ரூபாய் (படப்பிடிப்பு தளத்தில் தயாரிப்பாளர் கொடுத்த பணம். இது அவரது தாய்க்கு தெரியாது.) சரிகா செலவு செய்ததற்காக தனது தாயால் வலிமையாக தாக்கப்பட்டுள்ளது தனிக்கதை

kamalhaasan, sarika, love,marriage, shruti haasan, akshara haasan, cinema, sivajiganeshan, கமல்ஹாசன்,சரிகா, காதல், திருமணம், ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன். சினிமா, சிவாஜிகணேசன்
இளம்வயதில் கமல் மற்றும் சரிகா

இந்தப்புறம் கமலின் வாழ்க்கை மிகவும் வித்தியாசமானது. தனது தந்தையால் மிகவும் ஊக்கவிக்கப்பட்ட சிறுவன் கமல். தனது தாயுடன் சிறுவயதில் பெரிதாக நேரம் செலவழிக்கவில்லை என வருத்தமும் தெரிவித்துள்ளார்.
1980களிலேயே கமல் மற்றும் சரிகா காதலித்து வருகிறார்கள் என கிசுகிசுக்கள் பரவின. அது உண்மை என்றும் தெரிய வந்தது. தன் வாழ்வில் வலிகளை மட்டுமே கண்டு வந்த சரிகாவின் வாழ்வில் கமலின் காதலும், உறவும் வாழ்வின் மற்றொரு பக்கத்தை காண்பித்தது. அதன் பிறகு ஓர் அழகான வாழ்வை வாழ துவங்கினார் சரிகா.

kamalhaasan, sarika, love,marriage, shruti haasan, akshara haasan, cinema, sivajiganeshan, கமல்ஹாசன்,சரிகா, காதல், திருமணம், ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன். சினிமா, சிவாஜிகணேசன்
குட்டி ஸ்ருதியுடன் கமல்ஹாசன்

கமல் – சரிகா திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த சமயத்தில் தான் இவர்களுக்கு முதல் பெண் குழந்தை (ஸ்ருதி) பிறந்தார். அப்போது தான் திருமணத்தை பற்றி இருவரும் சிந்திக்க துவங்கினர். இந்திய சமூகத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்வது ஏற்புடையது இல்லை.

kamalhaasan, sarika, love,marriage, shruti haasan, akshara haasan, cinema, sivajiganeshan, கமல்ஹாசன்,சரிகா, காதல், திருமணம், ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன். சினிமா, சிவாஜிகணேசன்
சிவாஜி முன்னிலையில் கமல் – சரிகா திருமணம்

இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னரே இரண்டாவது குழந்தை அக்ஷராவும் பிறந்தார். இரண்டு குழந்தைகள் பிறந்து பிறகு 1988ல் இருவரும் சிவாஜி முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டனர். 28வயதில் தனது காதலுக்காக விருப்பமான துறையை விட்டு விலகி வந்த சரிகா, 43 வயதில் (2004) கமலுடன் விவாகரத்து பெற்றார்.

kamalhaasan, sarika, love,marriage, shruti haasan, akshara haasan, cinema, sivajiganeshan, கமல்ஹாசன்,சரிகா, காதல், திருமணம், ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன். சினிமா, சிவாஜிகணேசன்
ஸ்ருதி மற்றும் அக்ஷரா ஹாசனுடன் கமல்ஹாசன்

சரிகாவின் மகள்களான ஸ்ருதி மற்றும் அக்ஷரா இருவரும் திரை துறையில் கால் பதித்துவிட்டனர். கமல் எப்போதும் போல நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது அரசியல் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். சரிகா, மும்பையில் தனது அப்பார்ட்மெண்டில் எப்போதும் போல வசித்து வருகிறார்.

காதல் எப்போதுமே தோல்வி அடைவதில்லை, காதலர்கள் தான் தோல்வி அடைகிறார்கள்!

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kamalhassan sarika love story shruti hassan akshara hassan

Next Story
பிரேக் அப்: காதலரை பிரிந்த ’நண்பன்’ நடிகை இலியானா!Ileana breaks up with andrew
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com