Advertisment

Kanchana 3 Movie In Tamil: பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு அடுத்த இடத்தில் காஞ்சனா 3

Kanchana 3 movie in TamilRockers: காஞ்சனா 3 ரிலீஸான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் இந்தப் படத்தை ஆன் லைனில் வெளியிட்டிருக்காவிட்டால், வசூல் இதைவிட பல மடங்கு அதிகமாக இருந்திருக்கக்கூடும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kanchana 3 full movie in tamil, tamilrockers.com, காஞ்சனா 3, தமிழ் ராக்கர்ஸ்

kanchana 3 full movie in tamil, tamilrockers.com, காஞ்சனா 3, தமிழ் ராக்கர்ஸ்

Kanchana 3 movie Succeeds TamilRockers by good Box Office Collections: ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி வெளியான காஞ்சனா 3 படம், வசூலில் சாதனை படைத்து வருகிறது. ரஜினிகாந்தின் பேட்ட, அஜீத்தின் விஸ்வாசம் படங்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறது காஞ்சனா 3. தமிழ் ராக்கர்ஸ் முதல் நாளே ஆன் லைனில் வெளியிட்டபோதும், காஞ்சனா 3 வசூலில் சோடை போகவில்லை.

Advertisment

காஞ்சனா 3 படம், கடந்த 19-ம் தேதி வெளியானது. முதல் 10 நாட்களில் உலக அளவில் வசூலில் 100 கோடி ரூபாயை கடந்து சாதனை படைத்திருக்கிறது காஞ்சனா 3. காஞ்சனா 2 படத்திற்கு பிறகு, ராகவா லாரன்ஸுக்கு 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டும் 2-வது படம் இது. உலக அளவில் டிக்கெட் கலெக்‌ஷன் மூலமாக மட்டும் காஞ்சனா 3 படம் 57.8 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

kanchana 3 full movie in tamil, tamilrockers.com, காஞ்சனா 3, தமிழ் ராக்கர்ஸ் kanchana 3 movie in tamil: பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு அடுத்த இடத்தில் காஞ்சனா 3

Kanchana 3 Tamil Movie vs TamilRockers: காஞ்சனா 3 படம் வசூல் நிலவரம்

ராகவா லாரன்ஸுடன் பிக் பாஸ் பிரபலமான ஓவியா, வேதிகா ஆகியோரும் நடித்திருக்கும் காஞ்சனா 3, தெலுங்கில் மட்டும் முதல் வார இறுதியில் 9.2 கோடியை வசூல் செய்திருக்கிறது. 2-வது வார இறுதியில் தெலுங்கு வசூல் 20 கோடியைத் தாண்டியிருக்கிறது. தெலுங்கில் 2019-ம் ஆண்டு டப்பிங் படங்களில் இது சாதனை வசூல்.

முதல் 3 நாள் உலக அளவிலான வசூலில் 2019-ம் ஆண்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு அடுத்த இடத்தை காஞ்சனா 3 பிடித்திருக்கிறது. சவூதியில் 9 நாள் தியேட்டர் வசூல் ரூ 1.06 கோடி ஆகும். மலேசியாவில் வார இறுதி கலெக்‌ஷனாக 5.39 கோடியைக் குவித்து, இந்த ஆண்டின் 3-வது பெரிய வசூல் படமாக காஞ்சனா 3 நிற்கிறது.

சென்னையில் காஞ்சனா 3 படத்தின் முதல் 3 நாள் வசூல், 3.96 கோடி ரூபாய். இதுவரை தமிழகத்தில் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக காஞ்சனா 3 வசூலித்திருக்கிறது. சென்னையில் முதல் 3 நாள் வசூலில் பேட்டை, விஸ்வாசம் படங்களையும் காஞ்சனா 3 விஞ்சிவிட்டதாக கூறுகிறார்கள்.

காஞ்சனா 3 ரிலீஸான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் இந்தப் படத்தை ஆன் லைனில் வெளியிட்டிருக்காவிட்டால், வசூல் இதைவிட பல மடங்கு அதிகமாக இருந்திருக்கக்கூடும். தமிழ் ராக்கர்ஸையும் மீறி வசூலில் காஞ்சனா 3 சாதனை படைத்து வருவது திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

 

Tamil Cinema Raghava Lawrence Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment