வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சம்பளம்…சூப்பர் ஐடியா சொன்ன கமல்! எதிர்ப்பை பதிவு செய்த தலைவி நடிகை.

எல்லாவற்றையும் வியாபாரமாகப் பார்க்காதீர்கள். பெண்ணிடம் உங்களை ஒப்படைத்து விடுங்கள்

By: Updated: January 6, 2021, 10:20:08 AM

kangana ranaut twitter thalaivi movie kangana : : தமிழகம் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவி வாருகிறது. இம்முறை தமிழகத்தில் மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் கமல், வீட்டில் ஒன்றில் செய்யும் பணிக்கும் சம்பளம் வழங்கி, வீட்டில் இருந்தபடியே, அவர்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பெருக்க வழிவகை கொண்டு வர உள்ளோம்.உலகத் தரத்தில் கட்டமைப்பு, மாணவர்களுக்கு தரமான கல்வி, விவசாயிகளுக்கு நேரடி சந்தை, மீனவர்களுக்கு உயிர் காக்கும் தொழில்நுட்பம், ஒவ்வொரு தமிழனுக்கும் சொந்த வீடு என, எல்லாரையும் வளமாக்கும் திட்டம் இது என்றும் கூறி இருந்தார்.

வீட்டில் பல வேலைகளை முன்னின்று செய்பவர்களும் தாய்மார்கள்தான். எனவே, மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் அனைவருக்கும் ஊதியம் வழங்கப்படும். இது வெறும் தேர்தல் வாக்குறுதி மட்டுமல்ல, உலகம் எங்கும் உள்ள நேர்மையான ஆண்கள், தாயை வழிபடுவர்கள், இதைப்பற்றி யோசித்து வருகின்றனர். அதை நாங்கள் செயல்படுத்த உள்ளோம்” என்றார்.

கமலின் இந்த கருத்திற்கு பலரும் பாராட்டி இருந்தனர். இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம் வழங்கும் திட்டம் பற்றி தெரிவித்ததற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் வரவேற்பு அளித்திருந்தார். இதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வரவேற்று ட்வீட் ஒன்றையும் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் சசி தரூர் பதிவிட்டு இருந்த ட்வீட்டை முன்வைத்து நடிகை கங்கனா ரனாவத் பெண்களுக்கு ஊதியம் அளிப்பது குறித்து கமல் சொன்ன கருத்தினை கடுமையாக விமர்சித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், எங்கள் அன்புக்குரியவருடன் இணைவதற்கு விலை நிர்ணயிக்காதீர்கள். எங்களுக்குச் சொந்தமானவரை தாயைப் போல கவனித்துக்கொள்வதற்குச் சம்பளம் தர வேண்டாம். எங்கள் மாளிகையான வீட்டில் அரசிகளாக இருப்பதற்கு எங்கள் தேவையில்லை. எல்லாவற்றையும் வியாபாரமாகப் பார்க்காதீர்கள். பெண்ணிடம் உங்களை ஒப்படைத்து விடுங்கள். உங்களிடம் அன்பையும் மரியாதையையும் தான் எதிர்பார்க்கிறோம், ஊதியத்தை அல்ல என்று பதிவிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Kangana ranaut twitter thalaivi movie kangana ranaut tweet abount kamalhassan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X