'பிக் பாஸ்' இன்றைய கூத்து; ஓவியாவை திட்டித் தீர்த்த 'கஞ்சா' கருப்பு!

பல கோடி ரூபாய் முதலீடு செய்து, நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்களுக்கு அவரவர் பாப்புலாரிட்டிக்கு ஏற்றவாறு ரூபாய்களை அள்ளி வீசி தனியார் தொலைக்காட்சி நடத்திக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த ஷோவின் ‘ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸ்’ எங்களை விட நிச்சயம் உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

இந்நிலையில், ‘பிக் பாஸ் வீட்டில் விறுவிறுப்பான நான்காவது நாள்..’ எனும் தலைப்பில் ஒரு வீடியோ ஒன்றை அந்த தனியார் தொலைக்காட்சி இன்று வெளியிட்டு பரபரப்பை கூட்டியுள்ளது. அந்த வீடியோவில், ஓவியாவுக்கும், கஞ்சா கருப்பிற்கும் நடக்கும் வார்த்தை ‘போர்’ அடங்கிய க்ளிப்பிங்ஸ் இடம்பெற்றுள்ளது. அதாவது, போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது ஏற்படும் ஒரு சலசலப்பில், கஞ்சாகருப்பை பார்த்து ‘ஷட் அப்’ என்று ஓவியா சொல்ல, தோளில் கிடந்த துண்டை உதறிவிட்டு, கஞ்சா கருப்பு டென்ஷானாகி கன்னாபின்னாவென பேச ஆரம்பிக்கிறார் பாருங்க…!

ஆட்டம் ஆரம்பம்….

×Close
×Close