400 ஆண்டுகள் பழைய கதை, ஆனா வாட்டர் கேன் மட்டும் புதுசு; காந்தாரா பாடலில் தண்ணீர் கேன் கவனிச்சீங்களா?

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 2-ந் தேதி வெளியான இந்த திரைப்படம், வசூலில் அதகளம் செய்து வரும் நிலையில், பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது.

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 2-ந் தேதி வெளியான இந்த திரைப்படம், வசூலில் அதகளம் செய்து வரும் நிலையில், பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது.

author-image
D. Elayaraja
New Update
Kantara Water Cane1

400 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் புராண கதையாக வெளியான காந்தாரா எ லெஜண்ட் சாப்டர் 1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படத்தின் ஒரு பாடல் காட்சியில், தண்ணீர் கேன் வந்துள்ளதை கண்டுபிடித்த ரசிகர்கள் அதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisment

கடந்த 2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான இந்திய சினிமாவில் பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் காந்தாரா எ லெஜண்ட். இந்த 400 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்த இந்த படத்தின் கதைக்கு முந்தைய கதையை அடிப்படையாக வைத்து காந்தாரா எ லெஜண்ட் சாப்டர் 1 என்ற பெயரில் திரைப்படம் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை எழுதி இயக்கி ஹீரோவாக நடித்த் ரிஷப் ஷெட்டியே இந்த படத்தையும் இயக்கி நடித்துள்ளார்.

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 2-ந் தேதி வெளியான இந்த திரைப்படம், வசூலில் அதகளம் செய்து வரும் நிலையில், பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது. ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. பழங்குடி மக்களுக்கும் மன்னர் வாரிசுகளுக்கு இடையேயான மோதலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், கடவுள், தொன்மம் உள்ளிட்ட விஷயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Kantara Water Cane

ரூ125 கோடி பட்ஜெட் இப்படி ஒரு பிரம்மாண்ட படமா என்று பலரும் ஆச்சரியப்படும் வகையில் மேக்கிங்கில் அசத்தியுள்ளார் நடிகரும் இயக்குனருமாக ரிஷப் ஷெட்டி. பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வரும் நிலையில், முதல் வாரத்தில் 500 கோடிக்கு மேல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பாக்ஸ் ஆபீஸில் ஹிட் கொடுத்து வரும் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment
Advertisements

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற பிரம்ம கலாஷா பாடலில் ஒரு காட்சியில் தண்ணீர் கேன் இடம்பெற்றுள்ளது. படத்தின் கதை 400 ஆண்டுகளுக்கு முந்தைய களம் என்றாலும் கூட, இந்த பாடலில் தண்ணீர் கேன் எப்படி வந்தது என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இயக்குனர், எடிட்டர் மற்றும் கேமரா மேன் என படத்தின் முக்கிய நபர்கள் இந்த கேனை எப்படி இதனை கவனிக்க தவறினார்கள் என்றும் கேட்டு வருகின்றனர். இந்த பாடல் காட்சியில் 3 நிமிடம் 6  வினாடியில் தண்ணீர் கேன் இடம்பெறுவதை ரசிகர்கள் தற்போது கண்டுபிடித்து வைரலாக்கியுள்ளனர். இதனை தயாரிப்பு நிறுவனம் நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: