/indian-express-tamil/media/media_files/2025/10/04/chapter-1-2025-10-04-09-37-34.jpg)
’காந்தாரா சப்டர் 1’ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது
நடிகர், இயக்குநர் என்ற பன்முகத் தன்மை கொண்ட ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காந்தாரா சாப்டர் 1’. இந்த படத்தில் ருக்மணி வசந்த்,ஜெயராம், குல்ஷன் தேவையா, பிரமோத் ஷெட்டி, ரகேஷ் பூஜாரி, பிரகாஷ் துமினாட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். காந்தாரா மலைப்பகுதியில் கடவுள் பார்வதி தேவி சிவன் நிம்மதியாக தவம் செய்வதற்கு ஈஸ்வர பூந்தோட்டம் இடத்தை உருவாக்கினார்.
அந்த இடத்தை அடைய வேண்டும் என இரண்டு குழுக்கள் நினைக்கின்றன. அது மட்டுமல்லாமல் பாந்தோரா மன்னனும் நினைக்கிறார். இதனால், காந்தாரா பகுதி மக்களுடன் பெரும் படைகளை திரட்டி போரிடுகிறான். இந்த போரில் காந்தாரா மக்களை தெய்வம் காப்பாற்றியதா? இல்லையா? என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.
’காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் ரிலீஸாகுவதற்கு முன்பே ப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், வெளியான இரண்டே நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதுமட்டுமல்லாமல், ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்துள்ளது. ரூ.125 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படத்தை காண நேற்று 25.63 சதவிகித ரசிகர்கள் வருகை தந்ததாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் இரண்டாவது நாளில் இந்தியாவில் ரூ. 61.85 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அதாவது கன்னடத்தில் ரூ.18 கோடியும், இந்தியில் ரூ.19 கோடியும் வசூல் செய்துள்ளது.
தொடர்ந்து, தமிழில் ரூ.5.5 கோடியும் தெலுங்கில் ரூ.13 கோடியும் மலையாளத்தில் ரூ. 5.25 கோடியும் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் வரும் நாட்களில் மேலும் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு ‘காந்தாரா’ திரைப்படம் கன்னடத்தில் வெளியானது. ரூ. 15 முதல் ரூ.20 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
ப்ரீக்குவலாக முதலில் கன்னடத்தில் வெளியான இப்படத்தை ரசிகர்களின் பெரும் வரவேற்பிற்கு பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. இதையடுத்து, ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் ‘காந்தாரா சாப்டர் 1’ இருக்கிறது என்று கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் சம்பளத்தைப் பொறுத்தவரை, முதல் பாகத்தில் நாயகனாகவும் இயக்குநராகவும் நடித்த ரிஷப் ஷெட்டி ரூ.4 கோடி மட்டுமே வாங்கியதாகக் கூறப்பட்டது. ஆனால், இந்த முறை, லாபத்தில் ஒரு பங்கை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ரிஷப் ஷெட்டியுடன் நடித்த ருக்மிணி வசந்த், ஜெயராம், மற்றும் குல்ஷன் தேவையா ஆகியோருக்கு தலா ரூ.2 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.