காந்தாரா, அமேசான் பிரைமில் வெளியாகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கன்னட இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த படம் காந்தாரா. செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் முதலில் பாக்ஸ் ஆபிஸில் நுழையவில்லை.
இந்த நிலையில் வித்தியாசமான கதைக்களம், அது சொல்லப்பட்ட விதம் என தினந்தோறும் புதுபுது ரசிகர்களை தியேட்டர்களுக்குள் இழுத்தது.
இதன் விளைவாக, ரூ.16 கோடிக்கு எடுக்கப்பட்ட இந்தப் படம், தற்போது ரூ.216.15 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
முதலில் இந்தப் படம் கன்னட மொழியில் மட்டும் வெளியிடப்பட்டது. பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என மற்ற மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட்டது.
இந்தப் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் வெகுவாக பாராட்டியுள்ளார். இந்த நிலையில், படம் பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது நவம்பர் மாதம் காந்தாரா படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. கன்னடத்தில் காந்தாரா வெளியான தினத்தில் தமிழில் பொன்னியின் செல்வன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இதனால் முதலில் காந்தாரா படம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. கேஜிஎஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை தயாரித்த அதே நிறுவனம் காந்தாரா படத்தையும் தயாரித்திருந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil