அக்‌ஷய் குமார் மாதிரி எனக்கும் சமமா சம்பளம் கொடுங்க – கரீனா கபூர்

ஆண் சக நடிகர்களைப் போலவே சம்பளம் பெற விரும்புகிறேன்” என்றார் கரீனா.

Kareena Kapoor Khan
Kareena Kapoor Khan

Kareena Kapoor Khan:  பாலிவுட் நட்சத்திரங்கள் கரீனா கபூர் கான், ஆலியா பட், அனன்யா பாண்டே மற்றும் பலர் ”மாமி மூவி மேளா” என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். அதில் அவர்கள் பேசிய விஷயங்கள் தான் தற்போது இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக சம்பள பாகுபாடு குறித்த விஷயங்களைப் பற்றி நட்சத்திரங்களிடம் உரையாடினார் கரண் ஜோஹர்.

அப்போது சம்பள பிரச்னைக்காக படத்திலிருந்து எப்போதாவது வெளியேறியிருக்கிறீர்களா? என்றுக் கேட்கப்பட்டது. “படத்திலிருந்து வெளியேறுவதற்கு வேறுபட்ட காரணங்கள் இருந்திருக்கலாம், ஆனால் குறைந்த ஊதியம் பெறுவதால் அல்ல. இருப்பினும், ஆண் சக நடிகர்களைப் போலவே சம்பளம் பெற விரும்புகிறேன்” என்றார் கரீனா.

அடுத்து ”குட் நியூஸில்” அக்‌ஷய்யும் கரீனாவும் இணைந்து நடிக்கிறார்கள் என்பதால், அவர் சம்பளத்தைப் பற்றி கரீனாவிடம் கேள்வி எழுப்பினார் கரண். அதற்கு “அக்ஷய்க்கு பணம் கொடுக்கும் அளவுக்கு தனக்கும் கொடுத்தால், இந்த நிகழ்ச்சியை விட்டே நான் ஓடிவிடுவேன்” என்றார் கரீனா. தவிர குட் நியூஸின் தயாரிப்பாளரும் கரண் தான்.

பின்னர் தயாரிப்பாளரான கரண் ஜோஹர், “பலமுறை, மக்கள் அதைப் பற்றி அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். நான் எப்போதும் சரியான மற்றும் நியாயமான தொகையை செலுத்த விரும்பும் முதல் நபர். அதை நான்  எப்போதும் செய்து கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு டிஜிட்டல் மற்றும் சேட்லைட் ரைட்ஸ் தொகை, படத்தின் பட்ஜெட் ஆகியவற்றைப் பற்றிய பெரிய புரிதல் இருப்பதாக நான் உணர்கிறேன். அன்பு செலுத்துவதிலும், செய்த வேலைக்கு பணம் கொடுப்பதிலும் சமத்துவம் நிச்சயம் தேவை. இருப்பினும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் மிக சமமாம கொடுக்க முடிவதில்லை” என கரீனாவிடமும், ஆலியாவிடமும் கூறினார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kareena kapoor khan pay parity karan johar

Next Story
காற்றின் மொழி: பெண் குழந்தைன்னா அவ்ளோ எளக்காரமா?Kaatrin Mozhi Serial, vijay tv
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X