‘சதுரங்க வேட்டை’ எனும் அட்டகாசமான படத்தை இயக்கி கவனத்தை ஈர்த்த ஹெச்.வினோத் இயக்கத்தில், கார்த்தி நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. கார்த்திக்கிற்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
தீரன் திருமாறன் எனும் பெயரில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக மிரட்டியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Here is first look poster of #TheeranAdhigaaramOndru. Hope you like it. pic.twitter.com/IKCmo2od6u
— Actor Karthi (@Karthi_Offl) 30 June 2017
இப்படத்திற்காக நிஜ போலீஸ் அதிகாரிகளிடம் கார்த்தி பயிற்சி மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
‘தலைவா’ படத்தில் வில்லனாக நடித்திருந்த அபிமன்யூ சிங் தான் இதிலும் கார்த்தியுடன் மல்லுக்கட்டி இருக்கிறார்.