scorecardresearch

மாதம் ஒன்றரை லட்சம் சம்பாதிக்கும் விவசாயி வேடத்தில் கார்த்தி

கார்த்தி நடித்துவரும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில், மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் சம்பாதிக்கும் விவசாயி வேடத்தில் நடித்துள்ளார்.

kadaikutty singam

கார்த்தி நடித்துவரும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில், மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் சம்பாதிக்கும் விவசாயி வேடத்தில் நடித்துள்ளார்.

கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. பாண்டிராஜ் இயக்கிவரும் இந்தப் படத்தை, சூர்யாவின் ‘2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. ‘வனமகன்’ சயீஷா, பிரியா பவானிசங்கர், அர்த்தனா என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். கார்த்தியின் அக்காள்களாக மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி என ஐந்து பேர் நடிக்க, அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார். கலை இயக்குநராக வீரசமர் பணியாற்றுகிறார். ஐந்து அக்காள்களுக்கு கடைசி தம்பியாக கார்த்தி நடிப்பதால், இந்தப் படத்துக்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில், மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் சம்பாதிக்கும் விவசாயி வேடத்தில் நடித்துள்ளார் கார்த்தி. டாக்டர், இன்ஜினீயர் என்பதை தங்கள் பெயருக்குப் பின்னால் போட்டு பெருமைப்பட்டுக் கொள்பவர்களைப் போல, தன் பைக்கின் நம்பர் பிளேட்டில் விவசாயி என எழுதிவைத்துப் பெருமைப்படும் கேரக்டரில் கார்த்தி நடித்துள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Karthis kadaikutty singam important update