/tamil-ie/media/media_files/uploads/2017/08/Velaikaran.jpg)
நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி விரைவில் திரைக்கு வரவிருக்கும் வேலைக்காரன் படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
"ரெமோ" படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படம் "வேலைக்காரன்". இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் ஃபாசில் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை "24 AM STUDIOS" தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில், இப்படத்தில் வரும் பாடல் ஒன்றின் சிங்கிள் டீசரை இயக்குனர் மோகன் ராஜா கடந்த 26-ம் தேதி வெளியிட்டார். மேலும், அப்பாடல் ஆகஸ்ட் 28-ம் தேதி (இன்று) மாலை வெளியிடப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார்.
Feel the #KuthuVibes in @anirudhofficial& @Siva_Kartikeyan's latest single #KaruthavanlaamGaleejaam frm #Velaikkaranhttps://t.co/KDcI3TONm9pic.twitter.com/PX7LsNoxRk
— Sony Music South (@SonyMusicSouth) 28 August 2017
அதன்படி, கறுத்தவன்லாம் கலீஜாம்!!கிளப்பி விட்டாங்க என்று ஆரம்பிக்கும் அந்த பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை இயக்குனர் மோகன் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.