பிரபாஸ் ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை?

பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க, ஐந்து பாலிவுட் நடிகைகள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது

‘பாகுபலி’ எனும் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பிரபாஸ் நடிக்கும் படம் சாகோ. சயின்ஸ்ஃபிக்ஷன் த்ரில்லர் வகையில் உருவாகும் இப்படத்தை சுஜித் என்பவர் இயக்குகிறார்.

முன்னதாக, இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க, ஐந்து பாலிவுட் நடிகைகள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், கத்ரீனா கைஃப் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கத்ரீனா இதற்கு முன் தென்னிந்திய சினிமாவில் சில படங்களில் நடித்துள்ளார். 2006-ஆம் ஆண்டு மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக பல்ராம் vs தர்தாஸ் எனும் படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் அல்லரி பிடுகு, மல்லீஸ்வரி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஒருவேளை, பிரபாஸ் ஜோடியாக சாகோ படத்தில் கத்ரீனா நடிப்பது கன்ஃபார்ம் ஆகிவிட்டால், தென்னிந்திய சினிமாவுக்குள்  அவர் மீண்டும் காலடி எடுத்து வைத்து வாய்ப்பாக அது அமையும். 

×Close
×Close