அதெல்லாம் வேணாம் சார், ஆப்ஷனை சொல்லுங்க; ரியாலிட்டி ஷோவில் சிறுவன் காட்டிய திமிரு: நெட்டிசன்கள் கடும் விமர்சனம்!

KBC contestant Misehaviour controversy: ரியாலிட்டி ஷோவில் இஷித் பட் என்ற 10 வயது சிறுவன் மரியாதை இல்லாமல் நடந்துகொண்டாலும், அமிதாப் பச்சன் அமைதியாகவும், கலகலப்பாகவும் இருந்தது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

KBC contestant Misehaviour controversy: ரியாலிட்டி ஷோவில் இஷித் பட் என்ற 10 வயது சிறுவன் மரியாதை இல்லாமல் நடந்துகொண்டாலும், அமிதாப் பச்சன் அமைதியாகவும், கலகலப்பாகவும் இருந்தது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

author-image
D. Elayaraja
New Update
KBC contestant's behavior controversy | KBC Junior contestant 'Ishith Bhatt' controversy | KBC Junior contestant Arrogant and overconfident behavior

KBC Junior Contestant's Misbehaviour Controversy

KBC Junior Contestant's Rude Behaviour: பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிய கௌன் பனேகா குரோர்பதி (KBC) வினாடி-வினா நிகழ்ச்சியின் 17-வது சீசனில், 10 வயதுக்குட்பட சிறுவர் சிறுமிகள் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் இந்த போட்டியில் பங்கேற்ற குஜராத்தைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவன் இஷித் பட், என்ற 10 வயது சிறுவன் இணைவாசிகளால் மிகவும் வெறுக்கப்பட்ட சிறுவன் என்ற அடையாளத்தை என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார். 

Advertisment

அதே சமயம், இவ்வளவு இளம் வயதில் தான் வெளிப்படுத்திய தன்னம்பிக்கையால் பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றான். ஆனால், அவனது அணுகுமுறையும், துடுக்கான பதில்களும் பார்வையாளர்களுக்கு எரிச்சலை உண்டாக்கியது. தனக்கு முன்பாக அமர்ந்திருந்த ஜாம்பவானுக்கு சிறிதும் மரியாதை காட்டாமல், தன் வயதுக்கு மீறிய திமிரோடு அவன் நடந்துகொண்டதாகப் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இஷித் பட் மரியாதை இல்லாமல் நடந்துகொண்டாலும், அமிதாப் பச்சன் அமைதியாகவும், கலகலப்பாகவும் இருந்தது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

நிகழ்ச்சியின் சில பகுதிகள் இணையத்தில், குறிப்பாக ரெடிட் மற்றும் எக்ஸ் தளங்களில், காட்டுத்தீ போலப் பரவின. இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியை இதுவரை பார்க்காதவர்களைக் கூட இந்தச் செய்திகள் அந்த நிகழ்ச்சியை பார்க்க தூண்டும் வகையில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக, இளம் போட்டியாளன் இணையத்தில் அதிகமாகப் பேசப்பட்டவர்களில் ஒருவராக மாறியுள்ளார், இது அவனுக்கு மேலும் வெறுப்பை மட்டுமே ஈட்டியது.இறுதியில், சிறுசன் பட் வைரலாவது,  எதிர்ப்பைச் சந்திப்பது,  மீம்ஸ் உருவாக்கப்படுவது,  ஆதரவு கிடைப்பது என ஒரு முழுமையான இணையச் சுழற்சியைச் சந்தித்துள்ளார்.  

பட் பதிலளித்த விதத்தில் தனித்துத் தெரிந்தாலும், கேள்விகளுக்கு வேகமாகப் பதிலளிக்க அவர் காட்டிய அவசரம் பார்வையாளர்களைச் சங்கடப்படுத்தியது. ஒரு கட்டத்தில், அமிதாப் பச்சனிடம் நிகழ்ச்சியின் விதிகளை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டாம் என்று சிறுவன் வலியுறுத்தியுள்ளார். தொகுப்பாளருடன் அதிக உரையாடல் இல்லாமல், திரையில் கேள்விகளைக் காட்டச் சொல்லி சிறுவன் கூறிய அணுகுமுறை, அவருக்கு எதிரான எதிர்ப்பை மேலும் அதிகரித்தது. அதே சமயம், மரியாதை இல்லாமல் நடந்துகொண்ட இந்த சிறுவனை சமாளிக்கும்போது, அமிதாப் பச்சன் வெளிப்படுத்திய பொறுமையும், புன்னகையுடனே அவர் நடந்துகொண்ட விதமும் பலரின் பாராட்டுகளைப் பெற்றன.

Advertisment
Advertisements

தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இந்த பிரபலமான வினாடி-வினா நிகழ்ச்சியில் வேகமாக முன்னேற வேண்டும் என்று சிறுவன் பட் காட்டிய அவசரம் திடீரென முடிவுக்கு வந்தது. அவர் ரூ25,000 மதிப்புள்ள கேள்விக்குப் பதிலளிக்கத் தவறி, வெறுங்கையுடன் நிகழச்சியில் இருந்து வெளியேறினார். "வால்மீகி இராமாயணத்தின் முதல் காண்டத்தின் பெயர் என்ன என்பது தான் கேள்வி.

இந்த கேள்விக்கு, 1: பால காண்டம் 2: அயோத்தி காண்டம் 3: கிஷ்கிந்தா காண்டம் 4: யுத்த காண்டம் என விருப்பங்கள் கொடுக்கப்பட்டது. இந்த விருப்பங்களை ஒருமுறைப் பார்த்த பிறகு, அவற்றை மீண்டும் சொல்லுமாறு பச்சனை வலியுறுத்திய சிறுவன், “சார் ஒருமுறை அல்ல, நான்கு ஆப்ஷனை கூட லாக் செய்யுங்கள், என்று கூறியுள்ளார். அமிதாப் வழக்கம்போல், போட்டியாளன் தனது பதிலில் உறுதியாக இருக்கிறாரா என்று மறைமுகமாக உணர்த்த முயன்றார். 
இதனை கண்டுகொள்ளாத சிறுவன் பட் அவசரமாக இருந்தார். இதனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் பொன்னான வாய்ப்பைத் தவறவிட்டார்.

ஒரு ரூபாய் கூட வெல்லாமல் அவர் வெளியேறிய இந்தத் தருணத்தை இணையவாசிகள் மிகவும் கொண்டாடினர். வைரலான இந்தக் சிறுவனை இணையவாசிகள் உடனடியாக கிண்டல் செய்யத் தொடங்கினர். அவர் நிகழ்ச்சியில் செலவிட்ட குறுகிய நேரம் பார்வையாளர்களை வெறுப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது, மேலும் இந்த திடீர் முடிவை அவர்கள் எதிர்பார்த்ததாகவும் உணர்ந்தனர். இணையத்தில் பரவிய கேலிக்கு மத்தியில், சில எக்ஸ் பயனர்கள், தாங்கள் இளம் போட்டியாளரைக் குறை கூறவில்லை என்றும், தேசியத் தொலைக்காட்சியில் முழுமையாக வெளிப்பட்ட “தவறான வளர்ப்பின்” விளைவையே கொண்டாடுவதாகவும் குறிப்பிட்டனர்.

 சிறுவனின் தோற்றம் சமூக ஊடகங்களில் ஏற்படுத்திய குழப்பத்தின் மத்தியில், ஒரு எக்ஸ் பயனர், 10 வயது சிறுவனின் "வித்தியாசமான" நடத்தைக்கு “ஆறு பாக்கெட் சிண்ட்ரோம்" (Six Pocket Syndrome) என்ற நிகழ்வுதான் காரணம் என்று வாதிட்டார். சிறுவன் தொடர்ந்து கேலி செய்யப்படுவதைக் கண்டித்த எக்ஸ் பயனர், பட் "ஆறு பாக்கெட் சிண்ட்ரோமின்" பலியாள் என்று கூறினார். இது, ஒரே குழந்தை, வீட்டில் உள்ளவர்கள் அதிகச் செல்லம் கொடுத்து வளர்க்கப்படுவதால், அவனது கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படுவதால் ஏற்படும் நிலை. இந்தக் கவனமே, பட் தொலைக்காட்சியில் அவ்வாறு நடந்துகொள்ளக் காரணம் என்று அவர் கூறினார்.

இந்த விளக்கம் குறித்த கருத்துகளால் எக்ஸ் பயனர்கள் பிரிந்தனர். சிலர், இது போன்ற ஊகங்கள் விவாதத்திற்கு எந்த மதிப்பையும் சேர்க்கவில்லை என்றும், அந்தக் குழந்தை வயதின் மூலம் கற்றுக்கொள்வான் என்றும் நம்பினர். 10 வயது சிறுவனை இணையம் அதிகப்படியாக அலசி ஆராய்ந்து, விமர்சிப்பது எல்லை மீறிய செயல் என்று ஒரு பிரிவினர் கருத்து தெரிவித்தனர். சிறுவனை தனியே விடுங்கள் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

அவனுக்கு அதிக நம்பிக்கை இருந்தது. அநேகமாக அவனது பெற்றோர் அவனை வளர்த்த விதம் அதுவாக இருக்கலாம். அவன் தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டான். இந்தச் சம்பவத்தில் அமிதாப் பச்சன் மிகவும் கண்ணியமாக நடந்துகொண்டார். இணையம் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டிய நேரம் இது. அந்தக் குழந்தைக்கு அவனது சிறு வயதிலேயே போதுமான மன உளைச்சல் கிடைத்துவிட்டது," என்று ஒரு எக்ஸ் பயனர் பதிவிட்டுள்ளார்.

Amitabh Bachchan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: