சாய் பல்லவியுடன் மோதும் ஜீவா

சாய் பல்லவி நடித்துள்ள ‘கரு’ படமும், ஜீவா நடித்துள்ள ‘கீ’ படமும் ஒரே நாளில், அதாவது பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றன.

By: Updated: January 8, 2018, 02:53:15 PM

சாய் பல்லவி நடித்துள்ள ‘கரு’ படமும், ஜீவா நடித்துள்ள ‘கீ’ படமும் ஒரே நாளில், அதாவது பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றன.

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் சாய் பல்லவி. அந்த ஒரு படத்திலேயே மலர் டீச்சராக இளைஞர்களின் மனதைக் கவர்ந்தார். தொடர்ந்து ‘களி’ படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்தவர், ‘ஃபிடா’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அந்தப் படமும் வெற்றிபெற, நானி ஜோடியாக ‘எம்சிஏ’ படத்திலும் நடித்தார்.

தமிழில் விஜய் இயக்கத்தில் ‘கரு’ படத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி. இதுதான் அவருக்கு முதல் தமிழ்ப்படம். இந்தப் படத்தில் நாக செளரியா, ஆர்.ஜே.பாலாஜி, சந்தான பாரதி, ரேகா, நிழல்கள் ரவி, ஸ்டண்ட் சில்வா ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், ஜீவா, நிக்கி கல்ரானி நடித்துள்ள ‘கீ’ படமும் அதே தேதியில் ரிலீஸாக இருக்கிறது. அறிமுக இயக்குநர் கலீஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், இரண்டாவது ஹீரோயினாக அனைக்கா நடித்துள்ளார்.

மேலும், ராஜேந்திர பிரசாத், கோவிந்த பத்மசூர்யா, சுஹாசினி, ஆர்.ஜே.பாலாஜி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோரும் நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். சிம்பு நடிப்பில் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தை எடுத்து 18 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டப்பட்ட மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

சயின்ஸ் பிக்‌ஷன் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். 2 மணி நேரம் 22 நிமிடங்கள் ஓடும் வகையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Kee movie release on february 9th

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X