குட்டிப் பெண்ணிடம் பரிசை பறித்த குஷ்பு: சைமா விழாவில் ருசிகரம்

விருது பெற்ற நடிகை மீனாவின் மகள் நைனிகாவிடம்ளி குஷ்பு, மேடையிலேயே பரிசை பறித்துக் கொண்டார். அவர் பின்னாலேயே சுட்டி பெண் நைனிகா ஓட, விருதை கொடுத்தார்...

அபுதாபியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1-ம் தேதியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது சைமா விருதுகள் வழங்கும் விழா. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னட மற்றும் மலையாள சிறந்து விளங்கும் திரையுலகினருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை ரெமோ படத்திற்காக சிவகார்த்திகேயன் பெற்றுக்கொண்டார். இதேபோல, சிறந்த நடிகைக்காகன விருதை இருமுகன் படத்திற்காக நயன்தாரா பெற்றுக் கொண்டார்.

சிறந்த இயக்குநருக்கான விருது, தெறி படத்தை இயக்கியதற்காக அட்லிக்கு வழங்கப்பட்டது. சிறந்த பொழுதுபோக்கு நடிகராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெனரேஷனின் அடுத்த சூப்பர்ஸ்டார் விருது, மீனாவின் மகள் நைனிகாவிற்கு வழங்கப்பட்டது.

சிறந்த திரைப்படமாக இறுதிச் சுற்று தேர்வானது. அப்படத்தில் நடித்த ரித்திகா சிங், சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை தட்டிச் சென்றார்.

சிறந்த துணை நடிகராக மனிதன் படத்தில் நடித்த பிரகாஷ் ராஜ் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த துணை நடிகைக்கான விருது தர்மதுரை படத்தில் நடித்த ஜஸ்வர்யா ராஜேஷ்-க்கு வழங்கப்பட்டது.

சிறந்த விமர்சகர் விருது இறுதிசுற்று படத்தில் நடித்த மாதவனுக்கு வழங்கப்பட்டது. துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேனுக்கு, சிறந்த அறிமுக இயக்குநர் விருது வழங்கப்பட்டது.

கொடி படத்தில் வில்லியாக நடித்த த்ரிஷா, நெகட்டிவ் ரோலுக்கான விருதை கைப்பற்றினார்.ஆண்டவன் கட்டளை படத்தில் காமெடியில் கலக்கிய யோகி பாபு, சிறந்த காமெடியன் விருதை தட்டிச் சென்றார்.

செஞ்சிட்டாலே வச்சி செஞ்சிட்டாலே-ன்னு ரெமோ படத்தில் பாடலை தெறிக்க விட்ட அனிருத் சிறந்த பாடகராக தேர்வு செய்யப்பட்டார்.

சேதுபதி படத்தில் கொஞ்சி பேசிட வெண்டாம் பாட்டைப் பாடிய கே.எஸ் சித்ராவுக்கு, சிறந்த பாடகி விருது வழங்கப்பட்டது. அச்சம் என்பது மடமையடா படத்தில் மியூசிக் கம்போஸ் செய்த ஏ.ஆர் ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளராக தேர்வானார்.

மிருதன் படத்தில் முன்னாள் காதலி பாட்டெழுதிய மதன் கார்க்கி, சிறந்த பாடலாசிரியராக தேர்வானார்.

விருது வழங்கும் விழாவில், நைனிகாவின் விருதை செல்லமாக குஷ்பு பிடுங்கிக் கொள்ளவே, அதனை மீண்டும் பெற்றுக் கொள்கிறார் நைனிகா. அது குறித்த புகைப்படங்கள் இதோ.

Nainika, Kushboo

 

Nainika, Kushbhoo

Nainika, Saima award, Khushboo,

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close