/tamil-ie/media/media_files/uploads/2017/10/ajith-kumar.jpg)
அஜித்தை வாழ்த்தியதன் மூலம், ரஜினி, கமல் மற்றும் விஜய் உள்ளிட்ட தன் இயக்கத்தில் நடித்துள்ள நடிகர்களை மறைமுகமாக தாக்கியுள்ளார் கே.எஸ்.ரவிகுமார்.
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் ‘ஜெய் சிம்ஹா’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், நடாஷா தோஷி, ஹரிப்ரியா, பிரகாஷ் ராஜ், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொங்கலை முன்னிட்டு வருகிற 12ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.
இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கே.எஸ்.ரவிகுமார், “நான் பல நடிகர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். எல்லாருமே அவர்களுடைய ஸ்டார் வேல்யூவுக்காக டயலாக் உள்ளிட்ட சில மாற்றங்களை செய்யச் சொல்வார்கள். அது தவறும் இல்லை.
ஆனால், இரண்டு நடிகர்கள் மட்டும் என்னிடம் எந்த மாற்றமும் செய்யச் சொல்ல மாட்டார்கள். நான் சொல்வதைக் கேட்டு அப்படியே நடிப்பார்கள். ஒருவர் அஜித், இன்னொருவர் பாலையா” என்று தெரிவித்தார்.
கே.எஸ்.ரவிகுமாரின் இந்தப் பேச்சு, ரஜினி, கமல் மற்றும் விஜய் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், ரஜினி நடிப்பில் ‘முத்து’, ‘படையப்பா’ மற்றும் ‘லிங்கா’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் கே.எஸ்.ரவிகுமார். அதேபோல், கமல் நடிப்பில் ‘அவ்வை சண்முகி’, ‘தெனாலி’, ‘பஞ்ச தந்திரம்’, ‘தசாவதாரம்’ மற்றும் ‘மன்மதன் அம்பு’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
விஜய் நடிப்பில் ‘மின்சார கண்ணா’ படத்தை இயக்கியுள்ள கே.எஸ்.ரவிகுமார், அஜித் நடிப்பில் ‘வில்லன்’ மற்றும் ‘வரலாறு’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ஆக, அவர் அஜித்தை மட்டும் இப்படிச் சொல்லியிருப்பது அவர் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினாலும், மற்ற நடிகர்களின் ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.