'சண்டக் கோழி 2' ஷூட்டிங் எப்போது? லிங்குசாமி அறிவிப்பு!

மீண்டும் 'சண்டக் கோழி - 2' படம் மூலம் விஷால் - லிங்குசாமி இணைய முடிவு செய்தார்கள்.

சரியாக 12 வருடங்களுக்கு (2005) முன்னர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்து மிகப்பெரிய ஹிட்டான படம் ‘சண்டக் கோழி’. விஷால், லிங்குசாமி ஆகிய இருவரின் சினிமா கேரியரிலுமே இந்தப் படம் தான் பெஸ்ட் என்றால் அது மிகையல்ல.

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தின் ‘தீம்’ மியூசிக் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் ‘சண்டக் கோழி – 2’ படம் மூலம் விஷால் – லிங்குசாமி இணைய முடிவு செய்தார்கள். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வரலெட்சுமி ஒப்பந்தம் ஆகியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரண் இந்த பாகத்திலும் நடிக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா தான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இன்று இயக்குனர் லிங்குசாமி தனது ட்விட்டரில், “சண்டக்கோழி படத்தின் ஷூட்டிங், வரும் ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி முதல் தொடங்குகிறது” என பதிவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை லிங்குசாமி துவக்க உள்ளார்.

அதேபோன்று விஷால், மிஷ்கின் இயக்கத்தில் “துப்பறிவாளன்” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close