/indian-express-tamil/media/media_files/2025/10/24/lokha-2025-10-24-16-10-08.jpg)
கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்கள் எடுப்பதில் முன்னணியில் இருக்கும் மலையாள திரையுலகில், ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான திரைப்படங்கள் வெளியாகி, எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் வசூலை குவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 28-ந் தேதி வெளியான படம் ’லோகா சாப்டர் 1 சந்திரா’. இந்தியாவின் முதன் பெண் சூப்பர் ஹீரோ படமான இந்த படத்தில் கள்ளிக்காட்டு நீலி என்ற கதாபாத்திரத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார்.
துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான இந்த படம், மலையாள சினிமாவின் அனைத்து முக்கிய பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளையும் தகர்த்தெறிந்துள்ளது. இப்படம், மொத்தமாக ரூ.300 கோடி மேல் வசூல் என்ற மைல்கல்லைத் தாண்டி, இந்த சாதனையைப் படைத்த முதல் மலையாளப் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதன் அற்புதமான ஓட்டத்தில் பல புதிய சாதனைகளையும் இப்படம் நிகழ்த்தியுள்ளது.
டொமினிக் அருண் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் துல்கர் சல்மான், டோவினோ தாமஸ், நஸ்லன், சாண்டி மாஸ்டர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ‘லோகா’ திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் டோவினோ தாமஸ் மற்றும் துல்கர் சல்மானை தொடர்ந்தே செல்லும் என்று இயக்குநர் டோமினிக் அருண் தெரிவித்தார்.
இந்திய சினிமா எத்தனையோ சூப்பர் ஹீரோ படங்களை பார்த்துள்ளது. அனைத்தும் ஓரளவுக்கு ஹிட் என்றே சொல்லலாம். இருப்பினும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஒரே படம் கூட வரவில்லையே என்ற ஏக்கம் அனைவருக்கும் உண்டு. அந்த வகையில் அந்த ஏக்கத்தை மலையாள சினிமா நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், ’லோகா சாப்டர் 1 சந்திரா’ திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வரும் 31-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளம் போஸ்டரை சமூக வலைதளத்தில் பகிர்ந்து அறிவித்துள்ளனர்.
The world of Lokah unfolds exclusively on JioHotstar, streaming from October 31st.#LokahOnJioHotstar#LokahUniverse#YakshiReturns#LokahChapter1#Wayfarerfilms#DulquerSalmaan#DominicArun#KalyaniPriyadarshan#Naslen#Superhero#Lokahthefilm@DQsWayfarerFilm@dulQuer… pic.twitter.com/6rxPN0HkS2
— JioHotstar Tamil (@JioHotstartam) October 24, 2025
மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் கல்யாணி பிரியதர்சன் திரைப்பட தயாரிப்பாளரான பிரியதர்சன் மற்றும் நடிகை லிஸி தம்பதியனரின் மகளாவார். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஹலோ’ திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து, தமிழில் வெளியான ‘புத்தம் புது காலை’ , ‘மாநாடு’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us