Advertisment

திருக்குவளை பெற்றெடுத்த கலைஞன்... கருணாநிதி படைத்த காவியங்கள்

Karunanidhi Filmography : கருணாநிதி எனும் திரைத்துறை படைப்பாளி

author-image
Vaishnavi Balakumar
புதுப்பிக்கப்பட்டது
New Update
Karunanidhi Filmography

Karunanidhi Filmography

Karunanidhi Filmography : திமுக தலைவர் கருணாநிதி உடல்ரீதியாக இயற்கை எய்திருந்தாலும் அவரின் காந்தக் குரலின் வல்லமையும், கூர்வாள் வீச்சு போன்ற அவரின் எழுத்துக்களும் என்றும் நினைவை விட்டு அகலாத சுவடுகள்.

Advertisment

DMK Chief M Karunanidhi Filmography : திரைத்துறை கண்ட மாபெரும் படைப்பாளி:

இந்த உலகம் பல விசித்திரமான தலைவர்களை கண்டுள்ளது, பல புதுமையான கலைஞர்களைக் கண்டுள்ளது.

ஆனால் கருணாநிதி எல்லோரையும் போல அல்ல, படைப்பாளியாய், படைத் தளபதியாய், அரை நூற்றாண்டுகள் தலைவனாய் தமிழகத்தின் சூரியனாய் விளங்கினார்.

Karunanidhi Filmography இளமையில் கருணாநிதி

மாபெரும் கடலான ஊடகத்தை தன் வசமாக்கிய கலைஞர்:

“எனக்குச் சுயநலம் என்பீர்கள். ஆம். என் சுயநலத்திலும் ஒரு பொதுநலம் உண்டு. தடாகத்தில் உள்ள அழுக்குகளைத் தின்று தடாகத்தைச் சுத்தம் செய்யுமே மீன். அதுபோன்று என் சுய நலத்திலும் பொதுநலம் கலந்திருக்கிறது.”

பராசக்தி திரைப்படத்தில் கருணாநிதி எழுதிய வசனம் இது. அறை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாகத் திரையுலகை ஆட்சி செய்த அவரின் இந்த வசங்கங்கள் தான் இன்றளவும் வசன கர்த்தாக்களின் டிக்‌ஷனரி. படத்திற்கான வசனம் மட்டுமல்லாது, படத்தின் தொடக்கத்திற்கு முன்பு அவர் ஆற்றும் உரைக்கு நிகர் வேறு எதுவுமில்லை.

கலைஞரின் படைப்புலகம் ஒரு பார்வை (Karunanidhi Filmography)

நாடே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நேரத்தில், தமிழகம் நடத்தி வந்த சுயமரியாதை போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார் கருணாநிதி.

ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என்று மட்டும் இல்லாமல் மக்களிடம் தன் கொள்கையைக் கொண்டு செல்ல நாடகங்கள், திரைப்படங்கள், பத்திரிக்கை என எல்லா ஊடகங்களையும் பயன்படுத்திக்கொண்டார்.

Karunanidhi Filmography தந்தை பெரியாருடன் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி

புதுச்சேரியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் கருணாநிதியின் நாடகத்தைப் பார்த்த பெரியார், அவரை தன் பத்திரிக்கையின் துணை ஆசிரியர் பணியில் சேர்த்துக்கொண்டார்.

தன் சிறுவயது நாயகன் பெரியாரிடம் பேசப் பலர் காத்துக் கொண்டிருந்த வேளையில், தன் 19ம் வயதில் அவரோடு சேர்ந்து வேலை செய்ய கருணாநிதியின் நாடகம் அவருக்கு உதவியது. அதே காலகட்டத்தில் திரைத்துறையில் கால் பதிக்க ஆரம்பித்தார்.

Karunanidhi Filmography ராஜகுமாரி படத்தின் போஸ்டர்

1946ம் ஆண்டு ஜூப்பிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் பணியை தொடங்கினார். அப்போது தனது உறவினர் ஜெயராமனின் தூண்டுதலால் திரைக்கதை வசனம் என்னும் திரைமொழியை வசப்படுத்தினார்.

1947ம் ஆண்டு கருணாநிதியின் வசனத்தில் முதடன முதலாகத் திரைக்கு வந்தது ராஜகுமாரி திரைப்படம். இந்தப் படத்தில் தான் பின்னாளில் அவரின் நண்பர் எம்.ஜி.ஆர் அறிமுகமானார்.

Karunanidhi Filmography திமுக தலைவர் கருணாநிதியுடன் அவர் நண்பன் எம். ஜி. ஆர்

அதே ஆண்டில் தூக்குமேடை , ஒரே முத்தம், பரபிரம்மம் என 17 நாடகங்களை அரகேற்றினார். இதில் தூக்கு மேடை நாடகத்தைப் பார்த்து வியந்த எம்.ஆர். ராதா அவருக்கு என்று பட்டம் கொடுத்தார். இதை மறுத்த கருணாநிதி அறிஞர் என்றால் அது அண்ணாதான், என்று கூறி அந்தப் பட்டத்தை ஏற்க மறுத்தார். இதையடுத்து கருணாநிதிக்கு ‘கலைஞர்’ என்று பட்டம் கொடுத்தார் எம்.ஆர்.ராதா.

Karunanidhi Filmography மாடர்ன் தியேட்டர்ஸ்

1949 திராவிடர் கழகம் இரண்டாக உடைந்து திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது. புதிய கட்சிக்கு நிதி கொடுக்க கருணாநிதி சேலம் மார்டன் தியாட்டர்ஸ் நிறுவனத்தில் மாதம் 500 ரூபாய் ஊதியத்தில் பணியில் அமர்ந்தார்.

Karunanidhi Filmography பராசக்தி படத்தின் போஸ்டர்

திரைப்பணியை வெறும் பணத்திற்காக மட்டு செய்யாமல் அதை தன் கட்சியின் கொள்கைகளை கொண்டு செல்லும் ஊடகமாகப் பயன்படுத்திக்கொண்டார்.

அப்படி 1952ம் ஆண்டு கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் வந்த பராசக்தி திரைப்படம், திமுகவிற்கு மட்டும் அல்ல திரை உலகிற்கே புதிய ரத்தம் பாய்ச்சியது.

பராசக்தி படத்தில் இருந்து ஒரு காணொளிக் காட்சி

தமிழ் திரையுலகில் முதன் முறையாக வசனங்கள் புத்தகமாக அச்சடிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. அது வரை தமிழுக்கு அழகுண்டு என்று எண்ணியவர்களுக்கு தமிழுக்கு நிறமுண்டு, அது குணமுண்டு அடக்க நினைத்தால் அது தன்னை தற்காத்துக்கொள்ளும் அணு குண்டு என்பதை நிரூபித்தார்.

பூம்புகார் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான காட்சியின் காணொளி

சிலப்பதிகாரத்திற்கு புதிய அவதாரம் கொடுத்த கருணாநிதியின் பூம்புகார் திரைப்படத்தில் முன்னுரையாய் வரும் அவர் பேச்சு காட்சிகள் மக்கள் நெஞ்கங்களை கொள்ளை கொண்டது. கருணாநிதியின் வசனங்கள் தமிழகத் திரையுலகினை அடுத்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்வில் அமர்த்தியுள்ளது.

Karunanidhi Filmography காவியங்கள் படைந்த கலைஞர்... கருணாநிதி

எம்.ஜி.ஆர் சிவாஜியில் தொடங்கி விஜய் சிபிராஜ் வரை கிட்டதட்ட 4 தலைமுறைகளுக்கு வசனம் எழுதிய கருணாநிதி, தவிர்க்க முடியாத, கடந்து செல்ல இயலாத நாயகன்.

Karunanidhi Funeral Live Updates: விஐபி வாசல் வழியாக தொண்டர்கள் நுழைய முயற்சி, போலீஸ் தடியடி

Dmk M Karunanidhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment